பக்கம்:மணி பல்லவம் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

109

அப்படிப் பார்த்தபின் சுரமஞ்சரியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. ‘தன்னுடைய அனுமதியின்றி அவரும் நுழைய மாட்டாரே’ என்று சற்றுமுன் யாரைப் பற்றி அவள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவரேதான் அங்கே இளங்குமரனின் ஓவியத்துக்கு முன் நின்று கொண்டிருந்தார்! ஆம்! அவளுடைய தந்தையார்தாம் நின்று கொண்டிருந்தார். பிற்பகலில் இளங்குமரன் சென்ற சிறிது நேரத்தில் நூறு பொற் கழஞ்சுகளைப் பெற்றுக் கொண்டு போயிருந்த ஓவியன் மணிமார்பனும் தன் தந்தைக்கு அருகில் இப்போது சித்திரச்சாலைக்குள் நிற்பதைக் கண்டாள் சுரமஞ்சரி. தம் கை ஊன்றுகோலால் இளங்குமரனுடைய ஓவியத்தைச் சுட்டிக் காட்டி ‘ஏதோ செய்யுமாறு’ எதிரே பயந்து நடுங்கி நிற்கும் ஓவியனைத் தன் தந்தை மிரட்டுவதையும் படியில் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி கண்டாள். ‘பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு ஓவியன் போய் விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருந்தது தான் தவறு. தந்தையார் ஏதோ ஓர் அந்தரங்க நோக்கத்துக்காக ஓவியனைத் தடுத்துத் தங்க வைத்திருக்க வேண்டுமென்று’ அவளுடைய உள்ளுணர்வு அவளுக்குக் கூறியது. ஆனால் அது என்ன அந்தரங்கம் என்பதை மட்டும் அப்போது அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. சித்திரச் சாலையில் மேலும் என்னென்ன நிகழ்கின்றன என்பதை மறைந்திருந்து கவனிக்கலானாள் சுரமஞ்சரி.


14. செல்வ முனிவர் தவச்சாலை

‘அருட்செல்வ முனிவரைக் காணவில்லை’ என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/110&oldid=1141780" இலிருந்து மீள்விக்கப்பட்டது