பக்கம்:மணி பல்லவம் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

143

“இந்த சத்தியத்தை நான் செய்து கொடுக்க மாட்டேனென்று மறுத்தால்...?”

“மறுத்தால் வேறு வழியில்லை, மெய்யாகவே நான் இறந்துபோக வேண்டியதுதான். சக்கரவாளக் கோட்டத்துப் பூதம் நின்ற வாயிலின் மேலே ஏறிப் பூதச் சிலையின் உச்சியிலிருந்து கீழே குதித்து ஊரறிய உயிரை விடுவேன், ஏனென்றால் எனக்கு என் உயிரைவிட இளங்குமரன் உயிர் பெரிது” என்றார் அருட்செல்வ முனிவர்.

இந்தக் குரலின் உறுதியைக் கேட்டபின் முனிவர் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார் என்று வளநாடுடையாருக்கு நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“முனிவரே! இளங்குமரனுக்குக்கூட நீங்கள் உயிரோடிருப்பது தெரியக் கூடாதென்கிறீர்களே?” என்றார் வீரசோழிய வளநாடுடையார் வியப்புடன்.

“அப்படியல்ல, ஒரு குறிப்பிட்ட காலம் வருகிறவரை அவனுக்கு இது தெரிய வேண்டாம். அப்புறம் நானே தக்க சமயத்தில் தக்க ஆள் மூலம் உங்களையும் அவனையும் நான் இருக்குமிடத்துக்கு வரவழைத்து உங்கள் இருவரிடமும் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளத் தவிக்கும் சில உண்மைகளைச் சொல்வதற்கு நேரிடும். அந்தச் சமயத்தில் ‘நான் இறக்கவில்லை’ என்று இளங்குமரனும் தெரிந்து கொள்ளலாம். அது வரையில் அவனுக்கும் இது தெரியாமலிருப்பதே நல்லது.”

“அந்தச் சமயம் எப்போது வருமோ, முனிவரே?”

“அநேகமாக அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் புத்த பௌர்ணமிக்குள் அந்த நல்ல சமயம் வாய்க்கலாம்.”

“இத்தனை வயதுக்குமேல் இந்த முதுமைக் காலத்தில் என்னை ஒரு பொய்யைக் காப்பாற்றுவதற்காகச் சத்தியம் செய்யச் சொல்லுவது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? இது அடுக்குமா முனிவரே...?”

“பொய் மெய் என்பதற்கு நான் இன்று காலை உங்களிடம் கூறிய விளக்கத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/144&oldid=1141823" இலிருந்து மீள்விக்கப்பட்டது