பக்கம்:மணி பல்லவம் 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

மணிபல்லவம்

குமரனைப் போகவிட்டிருந்தார் நீலநாக மறவர். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடற்கரை மணற் பரப்பில் நண்பர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இளங்குமரன் மீண்டும் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது அங்கே அவனை எதிர் பார்த்து ஓவியன் மணிமார்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். தான் அப்போது நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் வந்து தங்கியிருப்பதை அந்த ஓவியன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது இளங்குமரனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“நீ மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் யாராவது என்னுடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வரச்சொல்லி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார்களோ என்று சந்தேகமாயிருக்கிறது, அப்பனே! என்ன காரியமாக இப்போது என்னிடம் வந்தாய்?” என்று இளங்குமரன் அவனை விசாரித்தான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஐயா! ஒருமுறை உங்கள் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு நான் படுகிறபாடு போதும். ஏழேழு பிறவிக்கு இப்படி அனுபவங்கள் இனிமேல் எனக்கு. ஏற்படவே வேண்டாம்.”

விளையாட்டாகப் பேசுவதுபோல் சிரித்துப் பேசத் தொடங்கியிருந்த இளங்குமரன், ஓவியன் கூறிய மறுமொழியில் வேதனையும், துயரமும் இருந்ததைக் கேட்டுத் திகைத்தான். ஓவியன் அச்சம் கொள்ளும் படியான நிகழ்ச்சிகள் எவையேனும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஓவியனைக் கேட்டான்:

“பதற்றப்படாமல் நிதானமாகச் சொல், மணி மார்பா! என்னுடைய ஓவியத்தை வரைந்து கொடுத்ததனால் இப்படி என்னிடமே வந்து அலுத்துக் கொள்கிறாற்போல் உனக்கு என்ன துன்பங்கள் நேர்ந்துவிட்டன?”

இதற்கு மணிமார்பன் மறுமொழி கூறவில்லை. இளங்குமரனைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களைப் பார்த்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/193&oldid=1141999" இலிருந்து மீள்விக்கப்பட்டது