பக்கம்:மணி பல்லவம் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

மணிபல்லவம்

வாங்கிக் கொண்டதும், அவனைக் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப் போடச் செய்தது.

“சற்றுமுன் நான் வளையத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது மேலே ஓடிப்போய்ப் புலிக் கூண்டுகளின் கதவைத் திறந்துவிடலாமென்று நினைத்தாய் அல்லவா?”

“அப்படி ஒருபோதும் நான் நினைக்கவில்லையே ஐயா!”

“புளுகாதே! நீ நினைத்தாய். எனக்குத் தெரியும். இன்னும் சிறிது நேரம் நான் வளையத்தில் தொங்கியிருந்தால் நீ நினைத்ததைச் செய்யும் துணிவுகூட உனக்கு உண்டாகியிருக்கும்.”

“இல்லவே இல்லை...” என்று சிரித்து மழுப்ப முயன்றான் ஓவியன்.

நகைவேழம்பர் ஒற்றை விழி அகன்று விரியக் குரூரமாகச் சிரித்தார்.

“நீ என்னை ஏமாற்ற முடியாது தம்பி. என் போன்றவர்களுக்குப் பிறருடைய மனத்தில் என்னென்ன நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை அநுமானம் செய்யமுடியாவிட்டாலும் என்னென்ன கெட்ட எண்ணங்கள் தோன்ற இயலும் என்பதை அநுமானம் செய்ய முடியும். நீ சோழ நாட்டுத் தண்ணீரை மட்டும் தான் குடித்திருக்கிறாய் தம்பீ! ஆனால் நான் எத்தனை எத்தனையோ தேசங்களின் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். நீ வண்ணங்களில் உருவாகும் அழகான சித்திரங்களோடு மட்டுமே பழகியிருக்கிறாய்; நானோ அழகும், அசிங்கமும், நல்லதும், கெட்டதும், சூழ்ச்சியும், சூதும் நிறைந்த எண்ணற்ற மனிதப்பயல்களோடு பழகியிருக்கிறேன், என்னைப்போல் பலருடைய வெறுப்புக்கு ஆளாகிய ஒருவன் இப்படிப் புலிக்கூண்டுகளின் இடையே உயிரையும், மரணத்தையும் அருகருகே வைத்துக் கொண்டு சோதனை செய்வது போல் தொங்கியபோது உன்னைப் போல் என்னைப் பிடிக்காத ஒருவனுடைய மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/205&oldid=1142012" இலிருந்து மீள்விக்கப்பட்டது