பக்கம்:மணி பல்லவம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மணிபல்லவம்

விழிப்பவன் போல் பரக்கப் பரக்க விழித்தான் இளங் குமரன்.

அவன் திகைப்பு நீங்கித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவர்களோடு கலகலப்பாகப் பேசத் தொடங்குவதற்கே சிறிது நேரமாயிற்று. அருட்செல்வ முனிவர் தாயை அன்றிரவு தனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தது, எதிரிகள் போகுமுன் இறுதியாகத் தன் செவியில் பயங்கரமாக எச்சரிக்கை செய்துவிட்டுப் போனது ஆகியவற்றைக் கதக்கண்ணனிடம் கூறாமல் ‘யாரோ இரண்டு முரட்டு நாகர்கள் தன்னை வழிமறித்துக் கொல்ல முயன்றார்கள்’ என்று மட்டும் பொதுவாகச் சொன்னான் இளங்குமரன்.

“நண்பனே! கவலைப்படாதே, உன்னுடைய எதிரிகள் எனக்கும் எதிரிகளே. அவர்கள் எங்கு சென்றாலும் தேடிப்பிடிக்கிறேன். இந்தச் சம்பாபதி வனத்திலிருந்து அவ்வளவு விரைவில் அவர்கள் தப்பிவிட முடியாது. நீ அதிகமாகக் களைத்துக் காணப்படுகிறாய். நேரே நம் இல்லத்திற்குச் சென்று படுத்து நன்றாக உறங்கு. இந்திர விழாவுக்காக நகரத்திற்குச் சென்றிருந்த என் தந்தையும் தங்கை முல்லையும் அநேகமாக இதற்குள் திரும்பி வந்திருப்பார்கள். அவர்கள் திரும்பி வந்து உறங்கிப் போயிருந்தால் எழுப்புவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் தயங்கி நிற்காதே...” இவ்வாறு கூறிக் கொண்டே அன்போடு அருகில் நெருங்கி முதுகில் தட்டிக் கொடுத்த நண்பனுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று இளங்குமரனுக்கு அப்போது தோன்றவில்லை. தன்னுடைய எதிரிகளை அவனுடைய எதிரிகளாகப் பாவித்துக் கொண்டு கதக்கண்ணன் வஞ்சினம் கூறியபோது, ‘நண்பன் என்றால் இப்படியன்றோ அமையவேண்டும்’ என்று எண்ணி உள்ளூரப் பெருமை கொண்டான் இளங்குமரன்.

கதக்கண்ணனும், அவனுடன் வந்த இன்னோர் ஊர்க்காவலனும் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/35&oldid=1141634" இலிருந்து மீள்விக்கப்பட்டது