பக்கம்:மணி பல்லவம் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

51

“படையல் முடிந்ததும் நீ தரப்போகிற நெய்யில்[1] பொரித்த எள்ளுருண்டையை நினைத்தால் வராமலிருக்க முடியுமா, முல்லை?” என்று நடந்து போகத் தொடங்கி விட்ட இளங்குமரன் அவள் செவிகளுக்கு எட்டும்படி இரைந்து சொன்னான். பின்பு தனக்குப் பழக்கமானவர்கள், நண்பர்கள் எவரேனும் அந்தப் பெருங்கூட்டத்தில் தென்படுகிறார்களா என்று தேடிச் சுழன்றன அவன் கண்கள்.

ஆனால் அவன் தேடாமலே அவனுக்குப் பழக்கமில்லாத புது மனிதன் ஒருவன் தயங்கித் தயங்கி நடந்து வந்து அருகில் நின்றான். ‘ஐயா!’ என்று இளங்குமரனை மெல்ல அழைத்தான். “ஏன் உனக்கு என்ன வேண்டும்!” என்று அவன் புறமாகத் திரும்பிக் கேட்டான் இளங்குமரன்.

“உங்களைப் போல் ஓவியம் ஒன்று எழுதிக் கொள்ள வேண்டும். தயவு கூர்ந்து அப்படி அந்த மரத்தடிக்கு வருகிறீர்களா?” என்று அந்தப் புது மனிதனிடருந்து பதில் வந்தபோது இளங்குமரனுக்கு வியப்பாயிருந்தது. ‘இது என்ன புதுப் புதிர்?’ என்று திகைத்தான் அவன்.


6. வம்பு வந்தது!

ன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறு மரப்பேழையும் அவனிடம் இருந்தன. அவன் இள வயதினன் தான். கலை அறிவுள்ளவர்களின் முகத்துக்கு அந்தப் பயிற்சியால் வரும் அழகுச் சாயல் தவிர இயல்பாகவேயும் அழகனாக இருந்தான் அவன். ஓவியம் எழுதுவதற்கு வந்ததாகத்


  1. இந்த எள்ளுருண்டைக்கு அக்காலத்தில் ‘நோலை’ என்று பெயர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/52&oldid=1141665" இலிருந்து மீள்விக்கப்பட்டது