பக்கம்:மணி பல்லவம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55

அழகையும் செழுமையையும் கண்டு கவர்ச்சி பெற்றாலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது என் மனம் கொதிக்கிறது தம்பி!”

அதைக் கேட்டபின் ஓவியனுடைய மனத்தில் அவநம்பிக்கை இருள்தான் கவிழ்ந்தது. நம்பிக்கை ஒளி சிறிதும் படரவில்லை.

“ஐயா! நீங்கள் கூறுகிற கருத்துக்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆனால் என் போன்ற ஏழைக் கலைஞனுக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. அருள் கூர்ந்து உங்களை சித்திரமாக்கி அந்தப் பெண்மணியிடம் அளிக்க அனுமதி தந்தீர்களானால், ஏதோ எனக்கும் அதனால் நூறு கழஞ்சு பொன் பெறுகிற வாய்ப்புக் கிடைக்கும். வெறும் உபதேசத்தினால் என்ன பயன் விளையப் போகிறது?” என்று நைந்து நம்பிக்கையிழந்த குரலில் மணிமார்பன் கூறியபோது இளங்குமரனுக்கு அவன்மேல் சிறிது ஆத்திரம் மூண்டது. ‘என் முன்னால் நின்று கொண்டே என்னை நோக்கி, வெறும் உபதேசத்தால் என்ன பயன் விளையப் போகிறது?’ என்று கேட்கிறானே இந்த இளைஞன். ‘கையாலாகாத ஆளுக்கு உபதேசம் எதற்கு?’ என்று என்னையே இடித்துக் காட்டுகிறானா இவன்?’

இளங்குமரன் தன் மனத்தின் ஆத்திரத்தை முகத்தில் காட்டாமல் அவனை உற்றுப் பார்த்தான். ‘பாவம்! ஏழை ஓவியன். நாம் ஒப்புக் கொள்வதனால் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஒப்புக் கொள்ளாவிட்டால் இவனுக்கு நூறு பொற் கழஞ்சு கிடைக்காமல் போகும். பிழைத்துப் போகிறான். செருக்கு மிகுந்த அந்தச் செல்வக் குமரிக்காக இல்லாவிட்டாலும் இவனுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்’ என்று ஆத்திரம் மாறி இரக்கம் உண்டாயிற்று, இளங்குமரன் மனத்தில். அடுத்த கணம் அவன் முகம் மலர்ந்தது; பாசத்தோடு அருகில் சென்று அந்த ஓவியன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “மணிமார்பா! தளராதே அப்பனே. எங்கே நான் கண்டிப்பாக மறுத்து விடுகிறேனோ என்ற பயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/56&oldid=1141671" இலிருந்து மீள்விக்கப்பட்டது