நா. பார்த்தசாரதி
337
ஆனால் நான் மறுபடியும் இந்த மாள்கைக்குத் திரும்பி வருவேனென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. இந்த ஒற்றைக்கண் மனிதர் என்னை இங்கிருந்தால் எளிதில் வாழவிடமாட்டார். இன்று நள்ளிரவுக்குள் உங்களுடைய செய்தியை உரியவரிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு நான் புறப்பட்டு விடுவேன்.”
“எங்கே புறப்படப் போகிறீர்கள்?”
“எங்காவது நல்லவர்கள் இருக்கிற இடத்தைத் தேடிப் புறப்பட வேண்டியதுதான்!”
“அப்படியானால் நாங்களெல்லாம் கெட்டவர்களா ஓவியரே?”
“நீங்கள் நல்லவர்களாயிருந்தால் மட்டும் போதுமா? உங்களுக்கும் இப்போதிருந்தே இந்த மாளிகையில் பல துன்பங்கள் வரத் தொடங்கிவிட்டனவே! உங்கள் மனத்துக்குப் பிடித்தவரை உங்கள் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை! உங்கள் தந்தையாரையும் அவருடன் சூழ்ந்திருப்பவர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஓவியரே! நான் இந்த மாளிகையில் வாழப் பிறந்தவள். இங்கு விளைகின்ற எல்லா இன்ப துன்பங்களையும் அநுபவித்துத்தான் ஆகவேண்டும்! நீங்கள் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள். போகுமுன் எனக்கு இந்த உதவியைச் செய்துவிட்டுச் செல்லுங்கள்.”
ஓவியன் வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.
“இதோ இதைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்”
ஓவியன் திரும்பினான். தன் கழுத்தில் அணிந்திருந்த மணி மாலையைக் கழற்றி அவனிடம் நீட்டினாள் சுரமஞ்சரி. ஓவியன் அதைப் பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்றான்.
“இவ்வளவு பெரிய பரிசுக்குத் தகுதியானவனா நான்”
“தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இதுந்தால் போதும். வாங்குகிறவர்களுக்கு மறுக்காமல் விரிங் கொள்வதுதான் பெரிய தகுதி. இப்போது நீங்கள் எந்த
ம-22