பக்கம்:மணி பல்லவம் 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

மணிபல்லவம்


"என் தந்தையும் நானும் வந்தோம். ஆலமுற்றத்துத் தாத்தாவும் தந்தையும் பேசிக்கொண்டே கடற்கரைப் பக்கமாகப் போய்விட்டார்கள். நான் மட்டும்..”

பலமில்லாதவன் வீசி எறிந்த கல் குறிவைத்த இலக்குக்கு முன்னாலேயே தளர்ந்து கீழே விழுந்து விடுவதைப் போல் முல்லையின் பேச்சும் தைரியமாகத் தொடங்கப்பட்டுத் தைரியம் நடுவிலேயே தளர்ந்து போனதால் இப்படித் தயங்கி நின்றது.

இளங்குமரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தான். அவனுடைய பார்வையைத் தாங்கிக்கொள்வதற்கே பயமாயிருந்தது அவளுக்கு. அவனோ பார்வையோடு விட்டுவிடாமல் அவளைத் தன் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள வைத்தான்.

"நீயும் கடற்கரைப் பக்கமாகப் போயிருக்கலாமே முல்லை! உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது?” -

'முதன்மையான விருப்பமாக எதை விரும்பு கிறோமோ அதுவே கை நழுவிப் போகிறபோது இரண் டாம் பட்சமான எல்லாவற்றையும் வெறுக்க வேண்டி யதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?' என்று இளங்குமரனுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தான். சிறிது தைரியமாகவே பேசிவிட்டதாக உள்ளுறப் பெருமையும் பட்டுக் கொண்டாள் முல்லை. நாளங்காடியில் அவனுக்கு நெல்லிக்கனியளிக்கும் போது பயந்ததுபோல அவன் முகத்தைப் பார்ப்பதற்குப் பயப்படாமல், இங்கே இப்போது தான் சற்றுத் துணிந்தே அவனுடன் பேசலாமென்று தோன்றியது அவளுக்கு. அவனும் துணிவாகவே அவளைக் கேட்டான்.

'நீ முதன்மையாக விரும்பியது எது? இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை? முதன்மையாக விரும்பி யது ஏன் கிடைக்கவில்லை? அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பான்ேன்? என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/120&oldid=1144509" இலிருந்து மீள்விக்கப்பட்டது