பக்கம்:மணி பல்லவம் 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

மணிபல்லவம்


தனிமை என்ற சுதந்திர உணர்வின் மேல் இப்போது கூச்சமும் பயமுமாகிய விலங்குகள் விழுந்து இறுக்கின. ஒவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களுக்கு மிக அருகில் வந்தார்கள். .

"பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டாய் மண் மார்பா ! இனிமேல் இந்திரவிழா முடிகிற வரையில் நீ இந்த நகரத்தில் கவலையில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பலாம்” என்றான் இளங்குமரன்.

நான்கு பேரும் புல்தரையில் அமர்ந்து கொண்டார் கள். இங்கு உட்கார முல்லைக்கு விருப்பமில்லை என்றாலும் நீலநாக மறவரோடு போயிருக்கும் தன் தந்தை கடற்கரையிலிருந்து வந்தாலன்றித் தான் வீடு திரும்ப முடியாதென்ற காரணத்தால் வேண்டா வெறுப் பாக அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். புதுமணப் பொலிவு குன்றாமல் திருமணத்துக்குப் பின் இன்னும் அதிகமாயிருந்த பேரழகோடு அருகில் உட்கார்ந்திருந்த மணிமார்பனின் மனைவியைப் பார்த்தாள் முல்லை. அப்படி அவளைப் பார்த்தவுடன் இன்னதற்கு என்று புரியாத எதற்காகவோ தான் அவள்மேல் பொறாமைப் படுவதற்கு இடமிருக்கிறதென்று தோன்றியது முல்லைக்கு. இந்த உலகத்தில் அழகிய நாயகனை மணந்து கொண்டு வாழும் அழகிய பெண்ணாயிருக்கும் எவளைப் பார்த்தாலும் அவள்மேல் தான். பொறாமைப் பட வேண்டியது நியாந்தான் என்று நினைத்தாள் முல்லை. அவளுடைய மனக்குமுறல்களை முகமே கண்ணாடியா யிருந்து பிரதிபலித்தது. சிறிது நேரம் நால்வரும் என்ன பேசுவதென்றே தோன்றாமல் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமார்பன் அந்த மெளனத்தைக் கலைத்தான். -

"ஐயா! இன்று புகலில் உங்கள் பூம்புகார் நகரத்தின் துறைமுகத்துக்கு அருகிலுள்ள வீதிகளையும் யவனப் பாடியின் வளம் மலிந்த கடைத் தெருக்களையும் என் மனைவியோடு சுற்றிப் பார்த்தேன். சென்ற முறை. நான் இந்த நகரத்துக்கு வந்திருந்தபோது கூட இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/126&oldid=1144515" இலிருந்து மீள்விக்கப்பட்டது