பக்கம்:மணி பல்லவம் 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

577


விரிவாய் இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்க்க வில்லை. அப்போது இங்கே எனக்கு ஏற்பட்ட துன்ப அநுபவங்களால் நான் இந்த அழகிய நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குப் பதிலாக இங்கிருந்து எப்போது வெளியேறி என்னுடைய சொந்த ஊருக்குப் போவேனோ என்று முள்மேல் நிற்பதைப் போலத் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த முறை வந்த போதுதான் உங்கள் நகரத்தை ஒரு கலைஞனுடைய கண்களால் பார்த்து நான் அநுபவிக்க முடிந்தது. யவனர்கள் கடைத்தெருவில்தான் எத்தனை எத்தனை நுணுக்கமான பொருள்கள்! எங்கெங்கிருந்தோ கடல் கடந்து வந்து உங்கள் சோழ நாட்டு மண்ணில் பரவி விளங்கும் கலைகளைப் பார்த்தால் எனக்குத் திகைப்பே ஏற்படுகிறது. பாண்டி நாட்டின் தலைநகராகிய எங்கள் மதுரையில்கூட வேற்று நாட்டுக் கலைகளும் பண்பாடு களும் இவ்வளவு அழகாக வேரூன்றவில்லை ஐயா !” என்று மணிமார்பன் வியந்து சொல்விக்கொண்டே வந்தபோது இளங்குமரன் அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சில வார்த்தைகள் சொன்னான். -

'மணிமார்பா! உன்னுடைய கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் நான் மறுக்கிறேன். இந்த நகரத்தி லுள்ள யவனப் பாடியின் செழிப்புமிக்க கடை வீதிகளையும் அங்கு மலிந்துள்ள பிறநாட்டுக் கலைகளின் வளத்தையும் பார்த்து நீ வியப்பது இயல்புதான். ஆனால் வேற்று நாட்டுக் கலைகள் இந்த நகரத்தில் வந்து வேரூன்றி யிருப்பதாக நீ சொல்வதுதான் பிழை. தியாயமாகப் பார்த்தால் எந்தக் கலையும் தான் தோன்றிய மண்ணில் வேரூன்றுவதைப் போல் இன்னொரு நாட்டில் வேரூன்ற முடியுமா என்பது சந்தேகம்தான். மிக உன்னதமான தொரு கலை எந்த நாட்டிலும் போய்ப் பரவலாம். ஆனால் அதனுடைய ஆணிவேர் அது பிறந்த மண்ணில் தான் ஊன்றிக் கொண்டிருக்க முடியும் என்று

பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்:

10-37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/127&oldid=1144516" இலிருந்து மீள்விக்கப்பட்டது