பக்கம்:மணி பல்லவம் 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

மணிபல்லவம்


பூதாகாரமாக வளர்ந்து கவிந்துகொண்டு தன்னை அமுக்குவது போல் பயமாகியிருந்தது சுரமஞ்சரிக்கு.

"தந்தை இரகசியமாக அங்கே வந்து இருளில் ஊன்றுகோலுடனே நின்றுகொண்டு தானும் வசந்த மாலையும் அதுவரை பேசிக்கொண்டிருந்தவற்றையெல் லாம் கேட்டவாறே இருக்கிறார் - என்று உணர முற்படும்போது அந்த உணர்ச்சியால் தன் உடல் முழுவதும் கருந்தேள் விழுந்து ஊர்கிறாற் போலச் சிலிர்த்து நடுங்கினாள் அவள்.

தன் வார்த்தையும் தான் அதை ஒலித்த குரலும் நடுங்கிட வசந்தமாலை' என்று மெல்ல அழைத்தாள் சுரமஞ்சரி. அந்த அழைப்புக்குப் பதில் குரல் கொடுக் காமலே பேச வேண்டாம் என்று சொல்வது போல் தன் வலக்கரத்தால் தலைவியின் பவழ மெல்லிதழ்களை இலேசாகப் பொத்தினாள் வசந்தமாலை. தோழியும் அப்போது மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தன் இதழ்களை மூடிய அவள் விரல்கள் நடுங்கிய விதத்திலிருந்து சுரமஞ்சரி புரிந்துகொள்ள முடிந்தது. அண்மைக் காலத்து நிகழ்ச்சிகளால் தன் தந்தையை விடை காண முடியாத விடு கதையாக நினைத்துப் பயப்பட வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு விநாடியும் அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாருக்கும் அடிமையாகக் கூடாதென்று செல்வம் சேர்க்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அந்தச் செல்வத்துக்கே முழு அடிமையாகப் போய்விடுவதுதான் முடிவாகும் என்பதற்கு தன் தந்தையையே நிதரிசன மான உதாரணமாகக் கண்டாள் சுரமஞ்சரி. செல்வத் துக்கு அடுத்தாற் போல அவர் நகைே 3. * *- : * * சிறிது அடிமைப்பட்டிருப்பது போலத் தோ அவளுக்கு. செல்வத்துக்கு அடிம்ைப்படுல் போலவே இரகசியங்களுக்கு அடிமைப்படுவது கரமானதுதான். இரகசியங்களுக்கு அடிமைப்படுகிறவ அதை உடையவனுக்கும் அடிமைப்ப்ட வேண்டிய திருக்கும். ஒரே சம்யத்தில் இந்த இரண்டு வகையிலும் அடிமைப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்குத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/136&oldid=1144525" இலிருந்து மீள்விக்கப்பட்டது