பக்கம்:மணி பல்லவம் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

மணிபல்லவம்


கொண்டு எந்த விநாடியில் இருந்தது சொந்தக் குண மென்று தெரியாமல் எந்த விநாடியில் எண்ணியது எல்லா விநாடிகளுக்கும் சத்தியம் என்றும் தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு நிலையான குணம் இது என்று எதைச் சொல்வது? -

'இப்பொழுது கூறிய வார்த்தைகள் யாருக்கா கவோ ?” -

"தனியாக யாருக்கென்று சொல்வது? உனக்காக - உங்களுக்காக, எனக்காக, எல்லாருக்காகவும்தான், ஒடுகின்ற ஆற்றுநீர் போல் சென்ற கணத்தில் இங்கு நின்றது அடுத்து கணத்தில் எங்கு நிற்பதெனத் தெரியாத தாய் எங்கும் நில்லாமல் ஒடிக்கொண்டே எல்லா இடத்திலும் நிற்பது போல் தெரிவதனால் குணம் ஓர் இயக்கம். இயக்கமில்லாத நிலையான சத்துவ குணத்தை அருட்கவிகளின் தெய்வீகமான காப்பியங்களில் வரும் உத்தமமான பாத்திரங்களிடம்தான் காண முடியும். மனம் சத்துவ குணமே நிரம்பியதாகும் போது உலகம் சுகரூபமாகவும், இராஜச குணமே நிரம்பியதாகும்போது அதே உலகமே துக்கரூபமாகவும், தாமத குணமே நிரம்பியதாகும்போது மோக ரூபமாகவும் தெரிகிறது. ஒரு சமயம் சுகமாய்த் தோன்றியது மற்றொரு சமயம் துக்கமாகவும், துக்கமாகத் தோன்றியது சுகமாகவும், மனத்துக்கும். அங்கு நிற்கும் குன நிலைக்கும் ஏற்ப மாறித் தோன்றுவதை எப்படி வரையறுக்க முடியும்?” "வரையறைகளையும் இலக்கணங்களையும் பற்றி நீங்கள் என்னிடம் பேசுவதைப் பார்த்தால் என்னையும் உங்களோடு வாதிட வந்தவளாக நினைத்துக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. நானும், என்னோடு வந்திருப் பவர்களும் உங்களை வாதுக்கு அழைக்க வரவில்லை. வணங்கிச் செல்வதற்கே வந்தோம்.” -

"அப்படியா? மற்றவர்கள் என்னை வணங்கு வதையும் சேர்த்து என்னால் வணங்கப்படுகிறவர் களுக்குப் பாவனையால் அனுப்பிவிடுகிறவன் நான். இப்படி வண்க்கங்களையும் கூட ஏற்று மகிழ முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/68&oldid=1144413" இலிருந்து மீள்விக்கப்பட்டது