பக்கம்:மணி பல்லவம் 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

519


வனைத் தேடி வந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன தான் சுகம் கிடைக்கப் போகிறது?"

"உலகத்தில் சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமோ? தொடர்ந்து துக்கமும், வெறுப்பும், அலட்சியமும் கிடைக்கிற இடத்தில் வந்து நிற்கும்போது அங்கே சுகம் கிடைக்காதென்று உணர்ந்திருந்தும மனம் அந்த அவநம்பிக்கையிலேதான் சுகம் ஒளிந்திருப்பதுபோல துரத்திக்கொண்டு வந்து நிறுத்துகிறதே...?” -

சுரமஞ்சரி இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் விழிகளில் நீர் சுழன்று ஈரம் மின்னுவதை இளங்குமரன் கண்டும் அமைதியாகவே நின்றான். நன்றாக நிமிர்ந்து அதுவரை இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைத் தானும் பார்த்தான் அவன், சுரமஞ்சரி நெகிழ்ந்த குரலில் மேலும் கூறலானாள்.

“இன்று நாங்களாக வரவில்லை. எங்கள் தந்தை யாருடைய வேண்டுகோளின்படி இங்கே உங்களைத் தேடி வந்தோம்.” . -

'உங்கள் தந்தையார் என்ன வேண்டுகோள் விடுத்தார் ?” . -

"நாளங்காடியில் யாரோ ஒர் இளைஞர் காண்போர் வியந்து வணங்கும்படி அழகாக வாதிடுகிறார். அவரை இந்த நகரத்து அறிவுடைப் பெருமக்கள் எல்லோரும் போற்றுகிறார்கள். புண்ணிய சீலராகிய அந்த இளை ஞரை வணங்கி வாழ்த்துப் பெறுவது பெரும் பேறு எனக் கருதுகிறார்கள். "நீங்களும் இன்று போய் அவர் பாதங்களில் பூக்களைக் குவித்து வணங்கி வாழ்த்துப் பெற்று வாருங்கள்’ என்று எங்கள் தந்தையார் எங்களிடம் கூறியனுப்பினார்."

"உங்கள் தந்தையார். பிறரை வணங்கவும் விரும்பு வது உண்டு போலும், மற்றவர்களை வணக்குவித்து மகிழ்கிறவர்களால் வணங்கி மகிழவும் முடியுமோ, அம்மணி? . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/69&oldid=1144416" இலிருந்து மீள்விக்கப்பட்டது