பக்கம்:மணி பல்லவம் 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

521


எதிர்பார்த்தும் அந்த மென்மையான வணக்கத்தில் விருப்போ வெறுப்போ இல்லாமல் உதாசீனனாகக் கண் களை மூடித் தன் ஆசிரியரை நினைத்துத் தியானத்தில் மூழ்கினான். ". .

ஆனால் பூக்கூடைக்குக் கைகளை நீட்டிய சுரமஞ் சரியிடம் பணியாளன் கூடையை தர மறுத்தான்:

"நீங்கள் விலகி இருங்களம்மா! இவ்வளவு பெரிய கூடையைத் துரக்கித் திறந்து பூக்களைக் கொட்டுவதற்கு

உங்களால் முடியுமா? நானே கூடையைத் திறந்து

பூக்களை இவர் பாதங்களில் படைக்கிறேன்” என்று பணிவான குரலில் கூறிவிட்டுத் தானே கூடையோடு முன் வந்து இளங்குமரன்ை நெருங்கினான் பணியாளன். -

'நீ பூக்கூடையைக் கொடு ! நான்தான் இவர் பாதங்களில் பூக்களைப் படைக்க வேண்டும். புண்ணி யத்தையெல்லாம் நீ பெற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா அது முடியாது’ என்று வேடிக்கை யாகவும் பிடிவாதமாகவும் கூறிப் பணியாளனை மறித்து சுரமஞ்சரி கூடையைப் பிடித்தாள். அவன் உடனே சற்றுப் பயந்து பதறினாற்போன்ற குரலில், "வேண்டாம் அம்மா! விட்டுவிடுங்கள்” என்று சொல்லிக் கூடையை இறுகப் பற்றிக்கொண்டான். அவள் அவன் கூறியபடி கேட்காமல் கூடையைத் தன் பக்கமே இழுத்தாள்.

உயரமும் அகலமுமான அந்தப் பெரிய பூக் குடலையை இருவரும் மாறி மாறித் தம்பக்கம் இழுத்த தனால் குடலையே இருவருக்கும் மாறி பொதுவில் கீழே விழுந்து சரிந்தது. பூக்கள் சிதறின. அவ்வளவில் யாரும் எதிர்பாராத குடல்நடுக்கும் காட்சியொன்றைக் கூடியிருந்தவ்ர்கள் கண்டார்கள். -

ஆ! இதென்ன? சரிந்த பூக்களோடு குடலைக் குள்ளிருந்து கருநாகம் ஒன்று சீறிக்கொண்டு வருகிறதே! கரிபூசிய அரசிலைப் போல அதன் படம் இளங் குமரனின் பாதங்களுக்கு மேலே உயர்கிறதே!. ஐயோ! கூட்டம் நிலைகெட்டு ஓடியது. சுரமஞ்சரி ஒன்றும் புரியாமல் iலென்று அலறிப் பின்வாங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/71&oldid=1144420" இலிருந்து மீள்விக்கப்பட்டது