பக்கம்:மணி பல்லவம் 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

537


சாங்கியன். அப்படியே தட்டோடு கனிகளை இளங் குமரனுக்கு முன்னால் நீட்டி, "எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் முல்லை. அப்போதும் இளங்குமரனின் முகத்தை நேரே ஏறிட்டுப் பார்க்கும் தெம்பு அவளிடம் இல்லை. 'என்னைப் பார் என்று துாண்டும் ஆசையும் 'பார்க்காதே’ என்ற பயமுறுத்தலும் சேர்ந்தே அவன் கண்களில் இருப்பதுபோல உணர்ந்தாள் அவள். அந்தக் கண்களின் அழகு அவளை அவன் முகம் பார்ப்பதற்குத் தூண்டியது. தூய்மை பார்க்கவிடாமல் அவளைப் பயமுறுத்திப் பின்னால் நகரச் செய்தது.

எங்கோ பார்த்தாற்போல் அவனையே பார்க்க முயன்றவளாய்க் கனிகளை அவனுக்குமுன் நீட்டினாள் முல்லை. எல்லாக் கனிகளையும் பார்த்துவிட்டுத் தட்டின் ஒரு மூலையிலிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொண்டு போதுமே என்ற பாவனை யில் கையசைத்தான் இளங்குமரன்.

'இன்னும் எடுத்துக்கொள். காலையிலிருந்து தண்ணிர் கூடப் பருகவில்லையே நீ” என்றார் நீலநாகர். முல்லை மறுபடியும் தட்டை அவன் அருகில் நீட்டி னாள். அவன் சிரித்தபடியே மறுத்துவிட்டான்.

"மனம் நிறைந்திருக்கிற சமயங்களில் வயிறு நிறை யாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை ஐயா! இந்த நகரத்தில் உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்தின் கரை களிலும் பசித்து கிடப்பவர்களைப் பற்றி நினைத்து நினைத்து என் பசியை நான் மறந்துபோன நாட்கள் பல. உலகத்தில் மற்றவர்களுடைய பசிகளையெல்லாம் உணர முடியுமானால் ஒவ்வொரு நியாயமானதுமனித

< : , * - . & - - * * - -

னுக்கும் தன் பசி மறந்துதான் போய்விடும் அப்படி மறந்து போவதற்கு விசாகையின் மத öJöyüᎢ டுமே” என்று இளங்குமரன் சொல்லிக்ெ போது சொல்லுவதைச் சில கணங்களு கொண்டு விசாகையின் முகத்தை மன நினைவுக்குக் கொண்டுவர முயன்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/87&oldid=1144449" இலிருந்து மீள்விக்கப்பட்டது