பக்கம்:மணி பல்லவம் 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

மணிபல்லவம்


அவனுடைய மனக்கண்ணில் உலகத்தின் கண் ணtரைத் துடைப்பதற்காகத் தன் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு அட்சய பாத்திரமும் கையுமாக விசாகை தோன்றினாள். நாவில் நெல்லிக்கனியின் சுவையும், நெஞ்சில் விசாகையைப் பற்றிய நிர்மலமான நினைவுகளும் புரள நின்றான் இளங்குமரன்.

"போகலாம் வா! நீ திருநாங்கூரிலேயே மேலும் சிறிது காலம் இருந்தால் கூட நல்லதுதான். இங்கே உன்னை அழித்துவிட முயல்கிறவர்கள் இன்னும் ஊக்கத்தோடு முனைந்து திரிகிறார்கள். ஒவியன் மணிமார்பன் முன்பு என்னிடம் கூறியது பொய்யல்ல” என்று அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எதையோ வெளியிடுகிறவர்போலப் பேசினார் நீலநாக மறவர். -

"ஐயா! ஒரு காலத்தில் என்னுடைய உடல் வலிமைக்கு எதிரிகளாக வருகிறவர்களையே நான் தேடினேன். அப்போது அவர்கள் மிகக் குறைவாகத்தான் எனக்குக் கிடைத்தார்கள். இப்போதோ நான் ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு என்னிடம் வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள்” என்று இளங்குமரன், நீலநாகர் வளநாடுடையார் இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு ஊன்றியிருந்த ஞானக் கொடியைக் கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

14. கற்பூர நறுமணம் 'இப்போது ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டி ருக்கிறேன். ஆனால் முன்பு நான் உடல் வலிமையை நம்பிக்கொண் டிருந்த காலத்தில் எதிரிகளாக வந்தி ருந்த வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/88&oldid=1144451" இலிருந்து மீள்விக்கப்பட்டது