பக்கம்:மணி பல்லவம் 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

539

.

கிறார்கள் - என்று சொல்லிவிட்டு வளநாடுடையார், நீலநாகர் ஆகியோரோடு இளங்குமரன் புறப்பட முற்பட்ட சமயத்தில் சிறிதும் எதிர்பாராத சந்திப்பொன்று அங்கே நிகழ்ந்தது.

"எதிரே வருகிறவர்கள் எல்லாம் எதிரிகளானால் இதோ உங்களுக்கு ஒரு புது எதிரி' என்று கூறிக் கொண்டே விசாகை அவனுக்கு முன்னால் தோன்றி னாள். இளங்குமரன் முகம் மலர்ந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். என்ன அற்புதம்! சில விநாடி களுக்கு முன்னால்தானே இவளை நினைத்தேன்? மனக் கண்களுக்குத் தோன்றியவள் உடனே புறக்கண்களுக்கும் தோன்றுகிறாளே! திருநங்கூரிலிருந்து இவள் எப்போது இங்கே வந்தாள்? என்று எண்ணிக் கொண்டே எதிரே நடந்து வரும் விசாகைக்குத் தன் பார்வையே வணக்கத்தை சுமந்து செல்லும் விதத்தில் நோக்கினான் இளங்குமரன். -

இவ்வளவு பரிசுத்தத்தைத் தாங்கிக்கொள்ள இந்த உலகத்தில் இடமில்லை, இடமில்லை என்பது போல்இந்த மண்ணுக்குத் தகுதியில்லை, தகுதியில்லை என்பது போல் ஒதுங்கி நடந்து கால்களை அதிர ஊன்றாமல் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் விசாகை. பூமாலை சரிந்து நழுவுகிறாற் போல் மண்ணிற் பதியாது மிதக்கும் நடை அது. தெளிந்த நீரில் பால் கலப்பது போல் அவள் வந்ததுமே அந்த இடத்தில் பிரகாசம் பரவியது. இந்த மண்ணில் ஊன்றி நடக்க மாட்டேன்' -என்பது போலவும், பிரவாகத்தில் மிதக்கும் பூவைப் போலவும், விசாகை வருகிற தூய்மையிலேயே மனம் தோய நின்றான் இளங்குமரன். இரும்பில் தோன்றும் துரு இரும்பையே அழித்து விடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்துவிடும்’- என்று விசாகை என்றோ தனக்குக் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டான் அவன். அப்படிச் சஞ்சலம் எனக்கு ஏற்படும் போதெல்லாம் இவள் எதிரே தோன்றுகிறாளே என எண்ணியவனாக, "திருநாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/89&oldid=1144454" இலிருந்து மீள்விக்கப்பட்டது