பக்கம்:மணி பல்லவம் 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

மணிபல்லவம்


கூரிலிருந்து எப்பொழுது புறப்பட்டீர்கள், அம்மை யாரே? சிறிது நேரத்திற்கு முன்னால்தான் உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று கேட்டான் இளங்குமரன். -

"இங்கு நான் வந்த நேரம் நல்ல நேரமில்லை போலும் ! நீங்கள் காயமுற்ற நெற்றியும் கலங்கிய கண் களுமாக எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?" என்றாள் விசாகை.

"காயம் பட்டதும், கலங்கியதும் உண்மை. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்ததும் என்னுடைய கலக்கங்கள் அழிந்து பழைய தெளிவை நான் உணர்கிறேன்" என்றான் இளங்குமரன்.

அங்கே அட்சய பாத்திரத்தோடு வந்த விசாகை யைக் கண்டதும் வளநாடுடையாரும், முல்லையும் என்ன நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை: படைக்கலச்சாலைக்கு வந்து அப்புறம் சந்திப்பதாகக் கூறி நீலநாக மறவரிடமும், இளங்குமரனிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். -

விசாகை தான் அன்று அதிகாலையில்தான் திரு நாங்கூரிலிருந்து புறப்பட்டதாகவும், இந்திரவிழா முடிகிறவரை காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள். ஒதுங்கி நின்றிருந்த நீலநாகர் அன்போடு அருகில் வந்து, 'சுகமாய் இருக்கிறாயா, அம்மா?” என்று விசாகையை விசாரித்தார்.

“எல்லாரும் சுகமாயிருக்கிறவரை என்னுடைய சுகத்துக்கு ஒரு குறையும் இல்லை ஐயா?” என்று அவரை நோக்கிக் கைகூப்பினாள் அவள். -

"நீயும் எங்களோடு வந்து ஆலமுற்றத்திலேயே தங்கிக் கொள்ளலாமே அம்மா! திருநாங்கூர்ப் பூம் பொழிலிலிருந்து யார் வந்தாலும் இங்கே ஆலமுற்றத்து விருந்தாளிகளாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார் நீலநாகர். விசாகை புன்னகை பூத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/90&oldid=1144457" இலிருந்து மீள்விக்கப்பட்டது