பக்கம்:மணி பல்லவம் 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

541


"இல்லை ஐயா! இந்த நகரத்தில் எங்கள் சமயத் தாருக்கு உரிய இந்திர விகாரம் என்னும் பெளத்தப் பள்ளியில் நான் போய்த் தங்கிக் கொள்வேன். நாளைக்குக் காலையில் மீண்டும் உங்கள் இருவரையும் நாளங்காடியில் இதே இடத்தில் சமயவாதிகளின் கூட்டத்துக்கு நடுவே சந்திப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று வணங்கினாள் விசாகை, அன்று காலையில் நாளங்காடியில் இளங்குமரனுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றி விசாகையிடம் சொல்ல லாமென நினைத்திருந்த நீலநாகர் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவரும் இளங் குமரனும் அவளுக்கு விடை கொடுத்தனுப்பினார்கள். காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக அந்தத் துன்பச் செய்திகளை அவள் அறிய வேண்டா மென்றே நீலநாகர் அவளிடம் இவற்றைக் கூறாமல் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். விசாகை விரைவாக விடைபெற்றுக் கொண்டதற்குக் காரணமும் இப்படிப்பட்டதுதான். இளங்குமரனும் நீலநாகரும் ஏதோ கவலை நிறைந்த சூழ்நிலையில் இருப்பதாக அவள் அதுமானம் செய்து கொள்ள முடிந்ததனால் அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் புறப்படுவதுதான் நல்லதென்று புறப்பட்டிருந்தாள் அவள். -

“புறப்படு தம்பீ! இந்தக் கோலத்தோடு இன்னும் இங்கே நிற்க வேண்டாம். இப்படிக் கலகலப்பான பொது இடங்களுக்கு அதிகமாக வந்து பழகுவதை விரும்பாத என்னை நீதான் உன் பாதுகாப்புக்காக இங்கே அடிக்கடி வரச் செய்கிறாய். நேற்று உன் பொருட்டு இங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். இன்றைக்கு வரவேண்டா மென்று நினைத்திருந்தேன் உன்னைத் தனியே இங்கு அனுப்பிய பின் எனக்கு மனம் கேட்கவில்லை. பிள்ளைப் பூச்சி குடைவதுபோல் மன்த்தில் ஏதோ வேதனை குடைந்தது. சிறிது நேரத்தில் நானும் புறப் பட்டு வந்துவிட்டேன். தெய்வ சித்தம் எவ்வளவு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/91&oldid=1144459" இலிருந்து மீள்விக்கப்பட்டது