பக்கம்:மணி பல்லவம் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

மணிபல்லவம்


உயிர் உதவிக்காக என்னை இங்கே புறப்படுவதற்குத் துரண்டியிருக்கிறது, பார்த்தாயா? நான் வந்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும், என்று நினைவை திகழாததோடு இணைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது தம்பீர்”

'வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா. நம் கைகளில் என்ன ஐயா இருக்கிறது ? விதிக்கு ஊழ் என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கன். ஊழ் என்றால் வரிசை, முறை என்று பொருள். செய்த வினைகளை நிறுத்தி நிறுத்து நிறுவைக்கு நோந்தபடி பயன்கள் வரிசையாக வருவதற்கு எவ்வளவு பொருத்தமாகப் பெயர் அமைந்திருக்கிறது, பார்த்தீர்களா?” என்றான் இளங்குமரன். முன்பு அவனைத் தழுவினாற்போல் அவனருகில் நடக்கிற இந்தச் சமயத்திலும் அவன் உடம்பிலிருந்து கற்பூரத்தின் நறுமணம் கமழ்வதுபோல் நீலநாகர் உணர்ந்தார்.

இப்படிப் பேசியவாறே இவர்கள் நடந்து கொண்டி ருந்தபோது, செவிகளில் மகர குண்டலங்கள் அசைய மார்பில் புலமையைப் பாராட்டி மன்னர்கள் அளித்த இரத்தின கண்டிகைகள் ஒளிரத் தங்கநிறப் பட்டு ஒரு தோளைத் தழுவினாற் போலச் சரிந்த இலங்கப் பிராகிருத மொழியிலும் பாலி, வடமொழிகளிலும், வல்லவரான பண்டிதர் ஒருவர் எதிரே வந்து இளங் குமரனின் கையிலிருந்து ஞானக் கொடியைப் பார்த்து விட்டுப் பசி கொண்டிருந்த சிங்கம் கண்முன் இரை கண்டாற் போன்ற ஆவலோடு நின்றார். அவர் வலக் கையில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன.

கம்பீரமான தோற்றமும் தோலாலும் சதையாலும் மட்டுமின்றி அறிவாலும் மிகுந்து தோன்றிய ஒளியும் அழகும் கொண்டு அந்தப் பெரும் புலவர் வந்து நின்றதும் இளங்குமரன் அவரை வணங்கினான். அவ்வாறு வணங்கும்போது இவருடைய அறிவுக்கு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/92&oldid=1144460" இலிருந்து மீள்விக்கப்பட்டது