பக்கம்:மணி பல்லவம் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5導3

வணக்கமும் அகம்பாவத்துக்கு என் அதுதாபமும் உரியனவாகுக' என்று மனத்தில் இரண்டையும் நினைத்துக் கொண்டே அவன் வணங்கினான். அந்த வணக்கத்துக்குப் பதில் வணக்கமும் செலுத்தாமல் ‘என்னடா சிறுபிள்ளையே என்கிற விதத்தில் சிரித்தது ஞான சிம்மம். நெற்றியில் இரத்தக் காயமும் மனத்தில் கலக்கமுமாகப் பசித்துத் தளர்ந்து இருக்கிறாயே! இப்போது எதற்கு வம்பு? இவரிடம் நாளைக்குச் சந்தித்து வாதிடலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்படு. இன்று காலைப் போதுக்கு இத்தனை வம்புகள் போதும்' என்று இளங்குமரனின் காதருகில் மெல்லச் சொன்னார் நீலநாக மறவர்.

- "ஐயா! நீங்கள் கூறுவது நல்லதானாலும் இப்போது இந்தப் புலவரை நான் அலட்சியம் செய்வதற்கில்லை. நோயாளிக்கு மருந்தளித்து அந்த நோயைப் போக்க வேண்டிய மருத்துவன் நோய் கண்ட போதெல்லாம் தோய் கண்ட இடமெல்லாம் தயங்காமல் உதவுவதில் தான் தொழிலால் கிடைக்கிற மெய்யான மன நிறைவு அவனுக்கு உண்டு. அறிவும் மருந்தைப் போன்றதுதான். இப்போது இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய், இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்பும் இவரை இந்த நோயோடு இப்படியே நலியவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று. ஞானத்தை அடக்கி வைத்துக் கொள்ளாமல் மலர்ந்த பூவைப்போல் எல்லார்க்கும் நுகரப் பயன்பட்டுக் கற்பூரம போல மணந்துகொண்டே பிரகாசிக்க வேண்டும்” என்று மெல்லிய குரலில் நீலநாகருக்குச் சொல்லிவிட்டு எதிரே நின்றவரை அதுதாபத்தோடு பார்த்துக் கொண்டே "புலவர் பெருந்தகையே! உங்கள் போரைத் தொடங் கலாம்." என்றார் இளங்குமரன். - - - -

முன்பு அவன் சரீரத்திலிருந்து உணர்ந்த கற்பூர நறுமணத்தை இப்போது அவன் சொற்களிலிருந்தும் உணர்வது போன்ற பிரமையை நீலநாகர் அடைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/93&oldid=1144461" இலிருந்து மீள்விக்கப்பட்டது