நா. பார்த்தசாரதி
619
இருப்பதாக வாய்திறந்து சொல்வதற்கே துணிகிறாய்! வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையிடம் அவர் பேசாமலே வந்ததற்கு நீயாகவே விளைவு கற்பிக்கிறாய்! எல்லாவற்றிலுமே குணம்தான் நிரம்பியிருக்கிறதென்று முற்றிலும் குணமாகவே பாவிப்பது எப்படிக் கெடுதலோ, அப்படியே முற்றிலும் குற்றமாகவே பாவிப்பது கெடுதல். அவர் அந்தப் பெண்ணிடம் பேசாமலிருந்தது குற்றமென்று நீ எப்படிச் சொல்ல முடியும். மௌனத்துக்குப் பொருள் விரோதமென்றுகொண்டால், நான் உன்னிடம் பேசாமல் இருத்த சமயங்களில் எல்லாம்கூட உன்னோடு விரோதமாயிருத்திருக்கிறேன் என்று நீ நினைக்கலாம்.”
“நான் அப்படி நினைத்தால் தவறென்ன? கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் மௌனமாகிவிட்டால் அந்த மௌனத்திற்குக் காரணம் இல்லாமற் போகாது. பேச்சுக்குக் காரணமும், அர்த்தமும் இருப்பது போல் பேசாமைக்குக் காரணம், அர்த்தம் எல்லாம் இருந்தே ஆக வேண்டும்.”
“பேச்சுக்கும், பேசாமைக்கும் ஆகிய இரண்டுக்குமே அர்த்தம் இல்லை. என்று அவரே சற்று முன் வளநாடுடையாரிடம் கூறியதைக் கேட்கவில்லையோ நீ? மௌனத்திற்கு ஒரே அர்த்தம் மௌனமாயிருப்பது என்பதுதான்...”
“அந்தப் பெண் அவருடைய மௌனத்தை அப்படி எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லையே! கப்பல் புறப் படுவதற்கு முன் நான் அவளிடம் விடை பெறுவதற்குச் சென்றேன். அப்போது அவள் எனக்கு விடை கொடுப்பதில் அசிரத்தையும் அவர் தன்னிடம் விடை பெறுவதற்கு வரமாட்டாரா என்று கவனிப்பதில் சிரத்தையும் காண்பித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய கண்களிலும் முகத்திலும் நம்பிக்கை அழிந்து - அது அழிந்த இடத் தில் ஏமாற்றம் குடி கொள்ளத் தொடங்கியிருத்தது.”
“அப்படியா? நீ சொல்வதைக் கேட்டால் முல்லை அப்போது நின்ற நிலை சித்திரத்திற்கு நல்ல காட்சியாக