மரப்படிகளில் பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு மேலே அதிர நடந்து வந்தார்.
அவர் மேலே வந்த விதமும், அவர்களைப் பாத்த பார்வையும் அவசரத்தையும் பரபரப்பையும் மூட்டுவன வாயிருந்தன.
“அதோ பின்னால் நம்மைத் துாத்திக்கொண்டு வருவதுபோல் தொடர்ந்து வரும் அந்தப் படகை பார்த்தாயா, தம்பீ? முதலில் யாரோ எங்கே? படகுப் பயணம் செய்கிறார்கள் என்றெண்ணி நானே அசிரத்தையாகத்தான் இருந்தேன், அந்தப் படகில் இருப்பவர்களில் ஒருவர் அடிக்கடி அன்று காலை நம்முடைய இந்தக் கப்பல் செல்லும் திசையில் நீட்டி மற்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் அதைக் கேட்டுப் படகின் வேகத்தை மிகுதிப்படுத்துவதையும் அந்தப் படகு நம்மை நெருங்குவதையும் கூர்ந்து கவனித்த பின்புதான் எனக்கே சந்தேகம் ஏற்பட்டது” என்று சொல்லிக் கொண்டே கரைப் பக்கமாகக் கையைக் காட்டினார் வளநாடுடையார். மனமார்பனும், இளங்குமரனும் அவர் காட்டிய திசையில் விரைந்து திரும்பிப் பார்த்தார்கள். உண்மைதான்! பின்னால் வந்து கொண்டிருந்த படகு துரத்துவதைப் போலத்தான் நெருங்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.
“நீ கீழே போய்விடு அம்மா?” என்று வளநாடுடையார் மணிமார்பனுடைய மனைவி பதுமைவைத் துரிதப்படுத்திக் கீழே அனுப்பிவிட்டுக் கணத்துக்குக் கணம் நெருங்கும் படகைக் கவனிக்கலானார். படகு அதன் உள்ளே அமர்ந்திருக்கின்றவர்களின் முகம் நன்றாகத் தெரிகிற அளவு நெருங்கிவிட்டது. மணிமார்பனுடைய பார்வை விரைந்து சென்று அந்தப் படகில் சந்தித்த முதல் முகத்தில் ஒரே ஒரு கண் இருந்தது. பார்த்த அவசரத்திலும் பார்க்கப்பட்ட, முகம் உண்டாக்கிய பரபரப்பிலும் ஒரு கண் இருந்தது தெரிந்ததா அல்லது ஒரு கண் இல்லாதது தெரிந்ததா என்று உணர முடியவில்லை. ஏற்கெனவே பழகிய அந்த