கலைஞர் மு. கருணாநிதி 93 குரு: அபாரம் அமைச்சரே! அவன் மாத்திரம் நமக்கு சமயத்தில் கிடைக்கா விட்டால், சீமான்கள் சபை நம் மூவர் மீதும் சந்தேகப்பட்டிருக்கும்! அரி: ஆமாம் - சந்தேகம் வலுத்திருந்தால், மதபீடம்... (குருவைக் காட்டி) அதிகார பீடம்... (மந்திரியைக் காட்டி) பிரச்சார பீடம்! (தன்னைக் காட்டி) மூன்று பீடங்களும் ஆடிப் போயிருக்குமே! அமை: இந்த மூன்று பீடங்களும் ஆடாமல் இருக்க என் மூளை இப்போது பலமாக வேலை செய்கிறது! குரு: இந்தப் பொம்மை ராஜனையும் அதிக நாள் நம்ப முடியாது ஸ்வாமி! அவனை எப்படியாவது அரசனைப் போல் கையெழுத்துப் போட வைத்து, அதிகாரமனைத்தையும் என் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்! வ்கு குரு: என்ன? (மனக் குழப்பத்தை வெளிக்காட்டாமல் அமை: ஆமாம் -அப்போதுதான் நம் இஷ்டப்படி நடக்க முடியும். அதற்கு சரியான சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது - அதாவது கல்நாட்டு விழாவுக்கு அரசன் வரப் போகிறான் என்று நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு வருவார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் - இவன் பித்தன் என்று! அவர்களுக்கு நேராகவே, அதிகாரங்களை என் பெயருக்கு மாற்றித் தருவதாக, அவனைச் சொல்ல வைக்கப் போகிறேன் - எப்படி குருநாதரே, யோசனை? குரு: பேஷான யோசனை! (மனக்கசப்பை வெளியிடாமல்)
பக்கம்:மணி மகுடம்.pdf/102
தோற்றம்