102 மணிமகுடம் அர: (மெதுவாக) சரி, உலகப்பா! நீ போ! அல்லி இங்கேயிருக்கிறவிஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! அமைச்சர் வந்தால், உடனே என்னிடம் ஓடி வந்து சொல்லு. - உல: அவர் எங்கே வரப் போகிறாரு வெளியே கிளம்பினால், தன் உயிருக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்று வெடவெடத்துப் போயி, வீட்டிலேயே இருப்பாரு! அர: சரி எதற்கும் வெளியே இரு... (வெளியே போதல்) உல: அப்படிச் சொல்லுங்கள் - உங்களுக்கு இடைஞ்சலா நான் ஏன் இங்கு இருக்கப் போகிறேன்! ஆனால், ஒண்ணு மயக்கம் தெளிஞ்ச பிறகு எழுப்புங்க! அர: குறும்புக்காரா போ.. போ... (அரசன் உலவிக் கொண்டேயிருக்கிறான். அல்லியைப் பார்த்தபடி - பிறகு ஒரு ஆசனத்தில், யோசித்தபடி உட்காருகிறான். உட்கார்ந்து அவளையே பார்க்கிறான்... அவன், இதய ஒலி...) - அர: "அல்லி, கண் நிறைந்த கனகவல்லி! மக்கள் மன்றமெனும் பொன் ஆரத்திலே மாணிக்கப் பதக்கமென ஒளிவிடும் புரட்சி ஓவியம், இந்த ஓவியத்தை என் இருதயச் சுவற்றிலே மாட்டி வைத்து அழகு பார்க்க முடியுமே தவிர, கண் பறிக்கும் இந்த சிங்காரச் சித்திரத்தை கன்னத்திலே ஒத்திக் களிப்படைய முடியாது -அவள் என்னைக் காதலிக்கிறாள் மனப்பூர்வமாக என்னையல்ல -அரசன் மணிமாறனை அல்ல அவன் கோட்டை கொத்தளங்களை அல்ல அவள் காதலிப்பது கொள்கை முழங்கும் புதுமைப் பித்தனை; புயலில் சிக்கித் தவிக்கும் அந்த புது மனிதனை மறைந்து வாழ வேண்டிய அந்த மர்ம ஜீவனை - அவள் காதலிக்கிறாள்... அரண்மனையிலே உலவும் அந்தஸ்து நிறைந்த ராணியாக வாழ விரும்பமாட்டாள். அல்லி மக்களின் இதய ராணியாகவே வாழுவாள்! அதனால் தான் நானும் அந்தப் புரட்சிக்காரியைக் காதலிக்கிறேன்! அவள்,அரசன் - - -
பக்கம்:மணி மகுடம்.pdf/111
தோற்றம்