உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 125 பொன்: இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அல்லி சொன்னாளா? கலா: நானே பார்த்தேன்! ரசித்தேன்! சிரித்தேன்! பொன்: சரி சரி! உன்னை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டியதுதான்! கலா: சாவூரைத் தவிர என்னை வேறூருக்கு அனுப்பாதீர்கள்! பொன்: கலாராணி! எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் தெரியவில்லையே! நீயே ஒரு வழி சொல் - அல்லியை மறப்பதற்கு! கலா: என்னை நினைத்துக் கொள்வது... பொன்: அவளை மறந்தல்லவா - உன்னை நினைக்க வேண்டும்! கலா: அவள் உங்களை நினைக்கவேயில்லையே! பொன்: அதற்குள் முடிவு கட்ட முடியுமா? அழியாத சித்திரமாக அல்லவா பதிந்துவிட்டாள் அல்லி என் மனதில்! அவளை மறக்க முடியுமா? முடியாது! முடியாது! கலா: மறக்க முடியுமா - முடியாதா என்பதை முடிவு கட்ட நான் ஒரு யோசனை சொல்லுகிறேன்! இப்போதே நீங்கள், அரண்மனைப் பக்கமுள்ள தோட்டத்திற்குப் புறப்படுங்கள் - அங்கே அல்லியைப் பார்ப்பீர்கள்! பொன்: என்ன சொல்கிறாய் கலாராணி! கலா: அல்லியை அள்ளிப் பருக அங்கே ஒருவன் காத்திருக்கிறான் - அல்லி, அங்கே போயிருக்கிறாள்! பொன்: உண்மையாகவா? கலா: ஏன் சந்தேகம்? போனால் தெரிகிறது? பொன்: இப்போதே போகிறேன். அல்லி யாருக்குச் சொந்தமுடையவள் என்பதை அறிந்துவருகிறேன். கலா ராணி! இதுமட்டும் பொய்யாக இருந்தால், பிறகு பொன்னழகன் உன் வரையில் புலியாக மாறிடுவான் ஜாக்கிரதை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/134&oldid=1706533" இலிருந்து மீள்விக்கப்பட்டது