உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மணிமகுடம் காட்சி 42 (மக்கள் மன்றம் -எல்லாரும் இருக்கிறார்கள், கலாராணி தவிர. பொன்னழகன் குழப்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான்.) என பொன்: மாற்றாரும் மலைத்திடும் அளவுக்கு மகோன்னத வளர்ச்சி பெற்றிருக்கிறது நமது மக்கள் மன்றம் மகிழ்ந்திருந்தேன்! இந்த மன்றத்தை அழித்திட யாருக்கும் துணிவு பிறக்காது என இறுமாந்திருந்தேன்! மகிழ்ச்சி - இறுமாப்பு - பெருமிதம் - அத்தனையும் தூள் தூளாகப் போய் விடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன! எதிர் தரப்பிலே ருந்து அல்ல! நமக்குள்ளேயே நாச எண்ணங்கள் தலைதூக்குகின்றன. கோட்டைக்குள்ளேயே குத்தும் வெட்டும் உருவாகக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன! அணைபோட்டுத் தடுக்க முடியாத துரோக வெள்ளம்! ஆம், தோழர்களே! ஐந்தாம் படைகள் இங்கேயே இருக்கின்றன! எந்த நேரத்திலும் இந்த மன்றத்தின் வாழ்வை தீர்த்துக் கட்டக் கூடிய அரசனுடைய கையாட்கள் நமக்குள்ளேயே உலவுகிறார்கள்! (அல்லி எதுவும் புரியாமல்) அல்லி: ஐந்தாம் படை? அரசனின் கையாள்? யார் அவர்கள்? பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்! இப்போதே நடவடிக்கை எடுப்போம்! பொன்: நான் யாரைச் சொல்வது அல்லி என்னையே நான் நம்பமுடியவில்லை! நீ கூட துரோகியாக இருக்கலாம்! அல்லி: ஆ! பொன்: உதாரணத்துக்குச் சொல்கிறேன்! என்னைக் கூட அரசன் தன்னுடைய கங்காணியாக ஆக்கிவிடக் கூடும்! ஆக்கி யிருக்கலாம்! நீ கூட அரசனுடைய அழகில் மயங்கியிருக்கலாம்! அவனது அரண்மனை - ஆடம்பரம் - அந்தஸ்து இவைகளில் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/145&oldid=1706544" இலிருந்து மீள்விக்கப்பட்டது