உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 155 உரிமைப் புதுவெள்ளத்தை அணைபோட்டுத் தடுக்கும் உமது உயிரை அணைக்காமல் திரும்ப மாட்டேன்! அர: உயிரை அணைப்பாய் - அல்லி - நான் யார் என்று தெரிந்தால் என் உடலையே அணைப்பாய்! (அல்லியை விடுகிறான். அல்லி துப்பாக்கியை அவன் மார்புக்கு நேராக நீட்டுகிறாள்) அர: அல்லி - சுடு! சுட்டுக் கொன்று விடு! ஆனால் சுடுவதற்கு முன் நான் யார் என்று தெரிந்து கொள்! (பீரோவிடம் திரும்புகிறான்.) அல்லி: நில்லும்! அர: துப்பாக்கியை எடுக்கப் போவதில்லை! இந்தத் துர்ப்பாக்கியன் யார் என்று காட்டப் போகிறேன்! கொஞ்சம் இரு! (பீரோவிலிருந்து தாடி முதலியன எடுத்து) ஒரு வினாடியில் தெரிந்து கொள்வாய் நான் யாரென்று! இதோ! பார் அல்லி! என்னைப் பார்! நீ யாரை சுட வந்திருக்கின்றாய் என்று பார்! (புதுமைப்பித்தனாக நிற்கிறான்.) அல்லி: ஆ! புதுமைப் பித்தனா? அர: புதுமைப் பித்தன்தான்! புரட்சிக்காரி அல்லியின் காதலன்தான்! தவறிப் போய் இந்தத் தங்க வீட்டிலே பிறந்து விட்ட மனிதன்தான்! அல்லி! சுடப் போகிறாயா என்னை? நீ சுடுவாய்! நீ ஒரு புதுமையான நெருப்பாயிற்றே! நீங்கினால் சுடுவாய் - நெருங்கினால் குளிர்வாய்! (அல்லி எதுவும் புரியாது திகைத்து நிற்கிறாள் பொன்னழகனின் குரல் மட்டும்) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/164&oldid=1706564" இலிருந்து மீள்விக்கப்பட்டது