உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 157 அல்லி: ஊஹூம்.. மக்கள் மன்றத்தின் கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும்! அதோடு அரசனின் காதலி என்ற அவமானச் சின்னத்தை உமது ரத்தத்தால் கழுவிக் கொள்ள வேண்டும்! புது: அப்படியானால் - கட்டளையை நிறைவேற்று! அல்லி! காதலனைக் கொன்று போட்டு விட்டுப் போ! இத்தனை நாள் நம்மிடையே வளர்ந்த நேசமும், பாசமும், உன் நெஞ்சிலே இரக்கத்தை உண்டாக்க வில்லை யென்றால் - நான் என்ன செய்ய முடியும்? உத்திரவை நிறைவேற்று! - உன்னை உயிராகப் பாவித்தவனின் உயிரைப் போக்கு! எந்த அகன்ற நெஞ்சிலே, உன் அழகான முகத்தைப் பதித்துச் சாய்ந்து கிடந்தாயோ - அந்த நெஞ்சிலே குறி பார்த்துச் சுடு! வேண்டாம் - வேண்டாம்! என் நெஞ்சிலே சுடாதே! அங்கே என் காதலி அல்லி இருக்கிறாள்! அவள் மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்து விடும்! என் தலைக்குக் குறி வைத்துக் கொல்லு! அன்பே! ஆருயிரே! - அருமருந்தே! உன் ஆசைக்குரியவனை ஒரு நொடியில் தீர்த்து விடு! உம் சுடு! இரு, இரு, இதோ வருகிறேன்! புதுமைப் பித்தனை சுட்டு விடாதே! அவன் உன் காதலன்! காதலனை சுடக் கூடாது! உன் பகைவன் அரசன் தான்! அரசனைச் சுடு! சுட்டுத் தள்ளு! (புதுமைப் பித்தன் வேடத்தைக் கலைத்து அரசனாக நிற்கிறான் - அல்லி, மெய்மறந்து நிற்கிறாள்.) அர: ம்.. சுடு... அல்லி.. இதோ உன் பகைவன் மணிமகுடபுரியின் மன்னன்! உன்னை மயக்கிய புதுமைப் பித்தனல்ல -அவன் ஒழிந்தான்! உன் கண் எதிரே இனி அவன் தோன்ற மாட்டான்! சுட்டு விடு - துவளாதே! மடமடவென்று சுட்டுத் தள்ளு! கொஞ்சம் பொறு... அல்லி! உன்னை ஆசை தீர ஒருமுறை நினைத்துக் கொள்கிறேன்! நாம் ஆடியதையும் பாடியதையும் மனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/166&oldid=1706566" இலிருந்து மீள்விக்கப்பட்டது