உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மணிமகுடம் (என்று அவளிடம் அவன் திரும்பி நெருங்குகிறான். அவள் முகத்தை மூடிக் கொண்டு சோகமயமாக வேறுபக்கம் போய்விடுகிறாள். புதுமைப்பித்தன் அதைவிட்டு வாட்டமுடன் நகருகிறான்) காட்சி 11 (அமைச்சர் வீடு - கலாராணியின் அறை - கலாராணி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். இனிமையாகப் பாடிக் கொண்டு! அப்போது அங்கே வஞ்சி வருகிறாள்) வஞ்சி: சபாஷ்.. சபாஷ்... கலா: எப்படி நடனம்? வஞ்சி: கலாராணியின் உடல் நெளிவது போல் கருநாகமும் நெளியாது. கலா: போதுமடி, கவிதா Racale சிரோண்மணி! உன் உதாரணங்களை மூட்டை கட்டிக் கொள்.. உளறாதே! ய வஞ்சி: பிறகென்ன கலா! புதிய உதாரணமாக என்ன சொல்வது? எல்லாம் சொல்லிச் சொல்லி புளித்துப் போய்விட்டது கலா: அதற்காக, கரும்பாம்பு என்கிறாயா என்னை..? வஞ்சி: நெளிவைச் சொல்லுகிறேன். கலா: ஏன் முல்லைக்கொடி என்று சொன்னால்...? வஞ்: மூவாயிரம் வருஷமாக அதைத்தான் சொல்கிறார்கள்... அதுவுமல்லாமல் முல்லைக்கொடி ஒரே இடத்தில் நின்று தான் காற்றில் ஆடும். நெளியும்! பாம்போ பல இடங்களில் ஆடும் -நெளியும் நகரும்... கலா: சீ! வஞ்: சீறும்..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/55&oldid=1706452" இலிருந்து மீள்விக்கப்பட்டது