48 மணிமகுடம் வஞ்: அவர்.. அவர் நல்ல அவர்! 'கலாராணி! உன்னுடைய அந்த 'அவர்' யார் என்றுதான் என்னிடம் சொல்லேன்... கலா: இன்று, அவர் யார் என்று உன்னிடம் சொல்லத்தான் போகிறேன். வஞ்: சொல்லு! கலா: சொல்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை - நான் அவர் யார் என்று சொன்ன பிறகு, நீ மறுபடியும் அரசரைப் பற்றிய பேச்சை என்னிடம் எடுக்கவே கூடாது! நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்; எனக்கு அரசர் மீது சிறிதும் விருப்பமில்லை. (அமைச்சர் குணசீலர் வந்து கொண்டே) குண: ஏனம்மா, விருப்பமில்லை? அரசன் என்ன அவலக்ஷணமா? அலங்கோல புருஷனா? கலா: அப்பா.. (ஏதோ சொல்ல முயல) குண: நானும் எத்தனையோ நாட்களாக முயலுகிறேன் - முயலுகிறேன் - நீ என் ஆசையையே அலட்சியப்படுத்துகிறாய் கலாராணி! உன் தந்தையின் அதிகாரமும், இந்த மந்திரி பதவியும் நிலைக்க வேண்டுமானால் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும்? - கலா: முடியாதப்பா... குண: கட்டளையிடுகிறேன் அடங்கி நட! கலாராணி! வருத்தப்படாதே! இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீர வேண்டும் அரசன், என்னையும் மீறுகிற ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அரசனுக்கும் நமக்கும் உறவு ஏற்பட்டு விட்டால் - பிறகு யார் தயவும் எனக்குத் தேவையில்லை. இப்போது இந்த மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள, சீமான்களுக்கு
பக்கம்:மணி மகுடம்.pdf/57
தோற்றம்