உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைஞர் மு. கருணாநிதி கலா: ஆ!.. (திகைப்பு) 53 அரசன்: ஒரு தங்கையை ஒரு அண்ணன், ஏன் சகோதர பாசத்தோடு நேசிக்கக் கூடாது! கலா: (வியப்புடன்) அரசே! அரசன்: கலாராணி, மணிமகுடபுரி மன்னவனின் தங்கை களில் ஒருத்தி! கலா: அரசே! என்னை மன்னித்து விடுங்கள்! (காலில் விழுகிறாள்) அரசன்: எழுந்திரு! அமைச்சர்தான் அவசரக்காரர் என்றால், அவர் மகள் நீயும் அப்படியே இருக்கிறாய்! கலா: தாங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அப்பாதான் என்னிடம் சொன்னார். அரசன்: எனக்கு ஏன் இப்போது திருமணம்? அதுவும் அமைச்சர் மகளை திருமணம் செய்து கொண்டால், வெறும் வாயை மெல்லும் புரட்சிக்காரர்களுக்கு கொஞ்சம் அவலும் அள்ளிப் போட்ட மாதிரிதான்! கலா: நான் விடைபெற்றுக் கொள்கிறேன், மன்னவா! அரசன்: நில் கலாராணி! வேறொருவனை விரும்புவதாகச் சொன்னாயே; யார் அவர்? (கலாராணி தலை குனிந்து நிற்கிறாள்) அரசன்: வெட்கம் தேவையில்லை. உன் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்க ரீதியாகவும் அக்கரை காட்டப்படும்! அமைச்சர் புதல்வியல்லவா நீ! அவன் யார்? இப்ப கலா: அவர் பெயரைச் சொல்வதே பெரிய குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/62&oldid=1706459" இலிருந்து மீள்விக்கப்பட்டது