உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 57 வஞ்சி: மரியாதை வேண்டும். பேச்சில் - நான் மந்திரி குமாரியின் தோழி! நீர் மெய்க்காப்பாளன்! உலக: மெய்க்காப்பாளன் என்றால் உனக்கு அர்த்தம் தெரியுமா? உண்மையைக் காப்பாற்றுகிறவன் - அதாவது அரசரிடம் உண்மையோடு பழகுகிறவன் - அந்தரங்க செயலாளன் - ரகசிய ஊழியன். வஞ்சி: அவ்வளவுதானா? உலக: இன்னும் இருக்கிறது.. மெய் என்றால் உடல் என்றும் கூறுவார்கள்! உன்னைப் போன்ற அழகியின் உடலை பத்திரமாகக் காக்கக் கூடியவன். வஞ்சி: மெய்க்காப்பாளர்-நான் சொல்லட்டுமா புதுப் பொருள்? உலக: சொல்லு! வஞ்சி: ஆபத்து வரும் போது மெய்யைத் தான் காப்பாற்றிக் கொள்ள தெரியுமே, தவிர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவர், சரிதானா? உலக: நீயும் ஒரு புலவிதான் போலும்! வஞ்சி: அப்படியானால் நீர் புலவரோ? உலக: ஆமாம், மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை எழுதுவேன்! வஞ்சி: எங்கே இப்போது எழுதும், மூச்சு விடுவதற்குள், முன்னூறு கவிதை... உலக: அடடா... இது புரியவில்லையா? மூச்சு விடுவதற்குள் முன்னூறு கவிதை வஞ்சி: ஆகா.. நல்ல கருத்து...குப்பை மேட்டிலே குண்டுமணிபோல! யாரும் இதுவரை சொன்னதேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/66&oldid=1706463" இலிருந்து மீள்விக்கப்பட்டது