58 மணிமகுடம் உலக: இதுபோல இன்னும் பல குண்டுமணிகளை நீ கபம் பொறுக்க வேண்டுமானால்... வஞ்சி: என்ன செய்ய வேண்டும்? ன் செய (உலக: ஒரு தாலி செய்ய வேண்டும்.வ வஞ்சி: என்னா, தாலியா? உலக: என், இதுகூட வேண்டாமா? சரி... வஞ்சி: ஓகோ! சரிதான்! அய்யா மெய்க்காப்பாளரே! இரவு நேரத்தில், ஒரு நந்தவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறையா?
- க்கும்
உலக: பிறகென்ன? பகல் நேரத்தில் ஒரு பாலைவனத்தில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் இப்படிப் பேசுவதுதான் முறை என்கிறாயா நீ? வஞ்சி: உமது உள்ளம்; கண்ணாடி போல எனக்குத் தெரிகிறது... உலக: கு (நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு) இந்தக் கண்ணாடியிலே உன் முகத்தைப் பார்த்துக் கொள் சீக்கிரம் சிங்காரித்துக் கொள் - கண்ணுக்கு மை எழுதிக் கொள்! பொட்டு வை! பொலிவு பெறும்! (வஞ்சி அவன் நெஞ்சுக்கு நேரே முகத்தை நீட்டி, கண்ணாடியில் பார்ப்பது போல நடித்து விட்டு) து வஞ்சி: அடடே! இது ரசமில்லாத கண்ணாடி! உலக: நீதானே காதல் ரசம் பூச வேண்டும். (வஞ்சி, வெட்கப்பட்டு சிரிக்கிறாள்) உலக: ஆகா! இவைகள் என்ன முத்துப் பற்களா... முல்லைச் சரமா? (அவளைத் தொடுகிறான்)