66 மணிமகுடம் என்றும், கையெழுத்திட்டு விட்டார் என்று செய்தி பிரசுரித்தது அரசாங்க பிரச்சார பீடத்தின் பகிரங்க மோசடி என்றும் மணிமகுடத்தின் ஒற்றன் கூறுவதை, மந்திரியோ, குருநாதரோ, சீமான் சபையோ மறுக்க முடியுமா?' (இந்தச் செய்தி படிப்பதை, அல்லி அங்கு நின்று மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள், அவளுக்கு ஒரே குதூகலம். அவர்களிடம் அல்லி, ஓடி வருதல்) அல்லி: அய்யா.. அய்யா.. அந்தப் பத்திரிகையை எனக்குத் தருவீர்களா? அவர்கள்: முடியாது.. முடியாது.. நாங்க படிக்கணும். (வேகமாகப் படித்தல்) "குருநாதரின் கோரதாண்டவம் - ஒரு சிறு கதை" (அல்லியைப் பார்க்காமலே, பதில் சொல்லி விட்டு, பத்திரிகையைப் படித்தவன், பிறகு அல்லியை நிமிர்ந்து பார்த்து விட்டு வியப்புடன்) அவர்: அட்டே -- நீங்களா... இந்தாங்க! (பத்திரிகையைத் தருகிறான்.) (தரும்போதே, படித்துக் கொண்டு தருகிறான்.) "மந்திரிகுமாரி - ஒரு தொடர்கதை - மர்மங்கள் நிறைந்தது!" அல்லி: சரி - சரி நீங்கள் படியுங்கள் - நான் வேறு வாங்கிக் கொள்கிறேன். (அவசரமாகச் செல்கிறாள் உற்சாகத்துடன்)
பக்கம்:மணி மகுடம்.pdf/75
தோற்றம்