74 மணிமகுடம் ஏழைகளின் குடிசைகளைத்தான் காலி செய்ய வேண்டுமென்று உத்திரவே தவிர, அவர்களின் எலும்பு உடல்களையும் காலி செய்து, அந்த எலும்புக் கூட்டுக்குள்ளே ஆண்டவனுக்கு பூஜை விளக்கு ஏற்றி வைக்க வேண்டுமென்று, கூறியது யார்? யார் கூறியது? த.வீர: குருநாதர் உத்திரவு! அமைச்சர் அங்கீகாரம்! அரசனின் கெயொப்பம்! எங்கள் சவுக்கு நுனிகளுக்கு சரியான வேட்டை! அல்லி: வேட்டையாடுவீர்கள், வீரர்களே, வேட்டையாடு வீர்கள் மக்கள், மாக்களாய் உள்ளவரையில்! கோழையின் கண்களில் அனலுக்குப் பதில் புனல் கிளம்பும் வரையில்! வேட்டையாடப்படும் மனித சமுதாயத்தின் இரும்புக் கை உங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உயரும் வரையில்! வேட்டையாடுவீர்கள்! நடமாடும் கோயில்களை அழித்து விட்டு, குருநாதனுக்காக ஒரு கோயில் கட்டும் குருடர்களே! குறைமதி கொண்ட வீணர்களே! நாட்டையாள வழியின்றி, மக்களை வேட்டையாடிய நாசகாலர்கள் எல்லாம், சரித்திரப் பள்ளத்தாக்குகளிலே, கள்ளிக்காடுகளாய், முளைத்துப் போய் கிடக்கிறார்கள் என்பதை நெஞ்சிலே நிறுத்துங்கள்! ட த.வீர: என்ன? ஆண்மை கொண்டவீரர்களின் அணிவகுப் புக்கு எதிரே; ஒரு அற்பப் பெண்ணுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம்? அல்லி: (சிரித்து) தவறான கணக்கு ராணுவத் தலைவரே. மிகத் தவறான கணக்கு! பெண்கள் வெறும் மஞ்சத்து ராணிகள் மட்டுமல்ல; நெஞ்சத்தில் பழிஏற்று விட்டால், கொஞ்சத்தில் விடமாட்டோம்; உம்போன்றோர் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும்வரை! ஏணை ஆட்டமட்டும் கற்றதில்லை இந்தக் கை! வெறியர்களின் ஆணையை உடைக்கவும் கற்றிருக்கிறது! கலை காட்டி, நாட்டின் நிலை காட்டும் அழகு சுந்தரிகள் மட்டுமல்ல பெண்கள்; உன் போன்ற கொடியோர்கள் தலைகாட்டினால் அதை நொறுக்கி எறியவும் தெரிந்தவர்கள். "வீரப் பெண்மணிகள் ஒரு நாட்டின் வெற்றித் திருவிளக்குகள் என்பதை பெண் என்றால் மாய மெனக் கூறும் பித்தனாம் உங்கள் குருநாதர்தான் மறுப்பார் - வாள் பிடிக்கத் தெரிந்தவரே! நீயுமா மறுக்கிறீர் ! வெட்கம்! வெட்கம்!
பக்கம்:மணி மகுடம்.pdf/83
தோற்றம்