88 மணிமகுடம் ஏ அமை: காலி செய்ய வேண்டுமென்று.... அர: அய்யோ! காலை காலி செய்து விட்டால், எப்படி நடப்பது? முடியாது முடியாது - நடக்க முடியாது... இப்படித்தான் நடக்க வேண்டும். கு (என்று நொண்டியைப் போல நடக்கிறான். அதைக் கண்ட சீமான்களும், மக்களும் பரிதாபப்படுகிறார்கள்.) சீமான்: அமைச்சர் அவர்களே! அரசர் உடல்நல மில்லாமலிருப் பதால் அவரை அரண்மனைக்கு அழைத்துப்போவது நல்லது! அர: அரண்மனை! அரண் என்றால் கோட்டை - மனை என்றால் வீடு - கோட்டை வீடு! கோட்டை வீடு! கோட்டை விடு!. எதைக் கோட்டை விடுவது? அமை: அரசே! அரண்மனைக்குச் செல்லலாம். அர: முடியாது - நான் ஆரண்யத்துக்குத்தான் செல்வேன் நான் திரும்பி வர பதினாலு வருஷங்கள் பிடிக்கும்- அதுவரையில் இந்த நாட்டை என் கிரீடம் ஆளட்டும் - இந்தாரும் அமைச்சரே! இந்த கிரீடத்தின் மீது சிம்மாசனத்தை தூக்கி வைத்து, எனக்குப் பதிலாக நீர் ஆளும்;இல்லாவிட்டால் நெருப்பு ஆளட்டும். (என்று கிரீடத்தை அமைச்சர் கையில் கொடுக்கிறான் - பிறகு வெளியே போவது போல நடக்கிறான், பின் திரும்பி வந்து) அடடே! அமைச்சரே! கிரீடத்தையா கொடுத்து விட்டேன் இதை சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதே... பாபமாயிற்றே... சிம்மாசனம் அழுக்காகிவிடும்..இதோ இதை சிம்மாசனத்தில் வையும்... தன் (என்று கிரீடத்தை வாங்கி கொண்டு பாதரக்ஷைகளைக் கழற்றி, அமைச்சர் கையிலே கொடுக்கிறான். அவரும் அவைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்.) பாபச்க அர: (கிரீடத்தைப் பார்த்தபடி) உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, ராஜபோகத்திலே, அதிகாரத்திலே உன்னைக்
பக்கம்:மணி மகுடம்.pdf/97
தோற்றம்