உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 96 மணிமகுடம் வந்திருக்கிறேன் - அப்படியானால் இந்த மான் - வள்ளி மானுமல்ல, புள்ளிமானுமல்ல, இது மாயமான் மாரீச மான்! இது ராமா! ராமா! என்று கத்தும்- (உலகப்பனைப் பார்த்து) ஏ லக்ஷ்மணா! பக்தியோடு கத்துகிறது என்று ஏமாந்து விடாதே! எடு வில்லை! தொடு கணையை! (என்று வாளை உருவி உலகப்பனிடம் நீட்ட, உலகப்பன் வாளைத் தொடுகிறான்.) ஏய் தொடு கணையை, என்றால், கணையைத் தொடுகிறாயா நீ! தொடுக்க வேண்டும், என்றுஅர்த்தமடா, முட்டாளே! அரி: (தயவாக) அரசே! குருவைக் கேலி செய்யாதீர்கள்! அவாள் பெரியவாள்! பா அர: என்னிடமிருப்பது என்ன; சின்ன வாளா? இதுவும் பெரிய வாள் தான்! அதுவும் போர்வாள்! யார் தடுத்தாலும் பாயக் கூடிய போர் வாள்! (வாளை சுழற்றிக் கொண்டே ஆடியபடி) 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று பாடுகிறான். குரு: அமைச்சரே! மன்னர் பிரானை இப்படி வேடிக்கை பார்ப்பது வேதனையாக இல்லையா? உடனே அழைத்துச் செல்லுங்கள் - ஏய் உலகப்பா! என்ன செய்கிறாய்? அர உலகப்பனா ஆடுகின்றாய் உலகப்பா! ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா! (சீமான் சபையைப் பார்த்து) தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன் - இந்த செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்! கம்பீரமாக) இந்நிலையில் இருப்பதனால் உலகப்பா - நீ புதுக்கணக்குப் போட்டு விடு! பொருளையெல்லாம் பொதுவாக எல்லார்க்கும் குத்தகை செய்! (இந்த சமயம் அமைச்சரும், குருநாதரும் அரசனை அழைத்துச் செல்லும்படி சைகை காண்பிக்கின்றனர்.) உலக: வாருங்கள் பிரபோ - உடனே சென்று பொருளை யெல்லாம் பொதுவாக்க, குத்தகை செய்து விடுவோம். (அரசனை அழைத்துப் போக ஒரு வீரன் வணங்கி நிற்கிறான். அவனைப் பார்த்தவுடன் அரசன் நடுங்குகிறான்..)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/99&oldid=1706497" இலிருந்து மீள்விக்கப்பட்டது