பக்கம்:மதன கல்யாணி-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - மதன கல்யாணி

பார்த்தேன்! நீ விளக்கோடு நின்றாய். இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் உன்னைக் கண்டது தெய்வத்தைக் கண்டது போல ஆய்விட்டது. இப்போது என் கையில் மாத்திரம் பணம் இருந்தால் உனக்கு உனக்கு நூறு ரூபாய் சன்மானம் செய்து, உள்ளே ஒரு தாழ்வாரத்தில் வந்து பொழுது விடியும் வரையில் இருந்துவிட்டுப் போக உன்னுடைய அனுமதி கேட்டிருப்பேன்” என்றான்.

அதைக் கேட்ட கிழவி சிறிது கவலை கொண்டு, “அடாடா! அப்படியா நடந்தது! இந்தப் பாதையில் அவ்வளவு திருட்டுப் பயமா? என்னுடைய எஜமானியம்மாள் பட்டணத்தில் இருந்து நடு இரவில் வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறாளே! அவளுக்கு ஏதாவது இப்படிப்பட்ட ஆபத்து நேருமோ என்று கவலையாக இருக்கிறதே! அவள் ஒவ்வொரு நாளும் இந்நேரத்துக் குள் வந்து விடுவாள். இன்றைக்கு இன்னம் வரவில்லையே என்று கவலை கொண்டு துக்கம் பிடியாதவளாய் படுக்கையை விட்டு எழுந்து வந்து பார்த்தேன். அதற்கு ஒத்ததாக நீரும் சங்கதி சொல்லுகிறீர்; ஒரு ராத்திரி தங்கி இருக்க நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பவர் ஒரு மகாராஜனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீர் யார் என்பதை முதலில் எனக்குத் தெரிவியும்; அதன்மேல் மற்ற சங்கதியைப் பற்றிப் பேசுவோம்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் முன்னிலும் அதிகமாகத் துணிவடைந்து “அப்படியானால் என் காட்டில் மழை பெய்ததாகவே நினைக் கிறேன். எனக்கு இடம் கொடுப்பதும் அன்றி மேல் விஷயத்தையும் பேச நீதயாராக இருப்பதைக் காண எனக்கு நிரம்பவும் சந்தோஷம் உண்டாகிறது. ஆகா! இப்போது மாத்திரம் என் கையில் பணம் இருந்தால் நூறல்ல, இருநூறு ரூபாய் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றான்.

கிழவி புன்னகை செய்து, “தங்களைப் போன்ற பெரிய மனிதர்கள் கொடுப்பதாகச் சொல்லுவதே போதுமானது. பணம் உங்களுடைய பெட்டியில் இருந்தாலும் அது எங்களுடைய பெட்டியில் இருக்கிற மாதிரிதான். அதைப்பற்றி நான் சந்தேகப்பட வில்லை. ஆனால், எனக்கு இப்போது இன்னொரு சந்தேகம் உண்டாய் விட்டது. முதலில், ராப்பொழுதைக் கழிக்க இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/102&oldid=646975" இலிருந்து மீள்விக்கப்பட்டது