பக்கம்:மதன கல்யாணி-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87

மைனர். அந்த மனிதர் யார்?

கிழவி:- அவர்தான் அந்த நாடகத்தின் சொந்தக்காரர். அவர் இந்த விஷயத்தில் நிரம்பவும் ஜாக்கிரதையுள்ளவர். அவர் இவளைத் தம்முடைய சொந்த சம்சாரத்துக்கு மேல் அதிகப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அநேகமாக ஒவ்வொரு நாளும் அவளோடு கூடவே அவரும் வந்துவிடுவார். அதற்காகத்தான் நான் இவ்வளவு துரம் கவலைப்படுகிறேன் - என்றாள். -

மைனர்:- அந்த மனிதனுக்கும் உன்னுடைய எஜமானிக்கும் ஏதாவது சொந்தமுண்டோ? - என்றான்.

அதைக் கேட்ட கிழவி புரளியாக நகைத்து “என்ன பைத்தியக் காரக் கேள்வி இது? நான் சொன்னதன் கருத்தை அறிந்து கொள்ள உம்மால் முடியவில்லையா? என் எஜமானியிடத்தில் நீர் எப்படிப் பட்ட உறவைச் சம்பாதித்துக் கொள்ள ஆசைப்படுகிறீரோ, அதே உறவுதான் அவர்களுக்குள்ளும் இருந்து வருகிறது” என்றாள்.

அதைக் கேட்ட மைனர், “என்ன ஆச்சரியம்! அவள் இன்னமும் கன்னிப்பருவம் கழியாதவள் என்றல்லவா கேள்விப்பட்டேன். நாடகத்தின் சொந்தக்காரருக்கு அவள் வைப்பாக இருப்பது எவருக்கும் தெரியவில்லையே” என்றான்.

கிழவி:- அதை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளுவார்களா? பெண்டுகள் விஷயம் அப்படித்தான் இருக்கும்; நீர் அதை எல்லாம் கவனித்தால், உம்முடைய காரியம் ஆகவே போகிறதில்லை; அது மிகவும் ரகசியமான சங்கதி, ஏதோ தவறுதலாக அதை நான் உம்மிடம் வெளியிட்டு விட்டேன். அதை அறிந்து கொண்டதாகவே நீர் காட்டிக்கொள்ளக் கூடாது - என்றாள்.

மைனர்:- அப்படியானால், நாடகத்தின் சொந்தக்காரரிடத்தில் அவளுக்கு அவ்வளவாகப் பிரியமில்லையோ? - என்றான்.

அதைக் கேட்ட அந்த புத்திசாலிக் கிழவி, “அதெப்படி இருக்கும்? குமரிக்கும் கிழவனுக்கும் உண்மையான காதல் ஒருநாளும் உண்டாகாது. வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கிழவனை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், ஆசைக்காக ஒரு குமரனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/105&oldid=646981" இலிருந்து மீள்விக்கப்பட்டது