பக்கம்:மதன கல்யாணி-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மதன கல்யாணி

வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள் இவளை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற வெறும் பெருமைதான் கிழவனைச் சேர்ந்தது. உண்மையான பிரியமும், அந்தரங்கமான காதலும், களங்கப்படாத சுகபோகங்களும் குமரனையே சேர்ந்தவை அல்லவா என்று மொழிந்து கொண்டிருந்த போது, சிறிது தூரத்தில் ஒரு வண்டி வந்த ஓசை கேட்டது. அதை உணர்ந்த கிழவி உடனே மைனரை நோக்கி, “சரி; அதோ வந்துவிட்டாள். நீர் கொஞ்ச நேரம் அப்பால் போய் மறைந்து கொண்டிரும்; அவள் உள்ளே போன பிறகு நான் மறுபடியும் திரும்பி வருகிறேன். சீக்கிரம் போம்; நிற்க வேண்டாம்” என்று கூறிய வண்ணம் இரும்புக்கதவின் உட்புறத்தில் இருந்த பூட்டைத் திறந்தாள்.

அதைக் கண்ட மைனர் மிகுந்த மனோவெழுச்சியும் பூரிப்பும் அடைந்தவனாய் விரைவாகச் சிறிது தூரம் நடந்து ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்து வண்டி வந்ததைக் கவனித்துக் கொண்டிருந் தான். அதற்குள், இரும்புக்கதவு நன்றாகத் திறக்கப்பட்டது. அடுத்த நிமிஷத்தில், பெட்டி வண்டி பங்களாவிற்குள் நுழைந்து விட்டது. கிழவி கதவைத் திரும்பவும் மூடிப்பூட்டிக் கொண்டு வண்டியோடு உள்ளே போய்விட்டாள். அந்தச் சமயத்தில் மைனரது மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆவேசமும் ஆத்திரமும் ஒன்றுகூடி அவரது தேகத்தை முறுக்கின. இந்த உலகமே புகழ்ந்து கொண்டாடும் மோகனாங்கியோடு தான் தனிமையில் பேசும் பாக்கியம் இன்னம் கால் நாழிகையில் பலித்து விடும் என நினைத்து அவன் பெரிதும் அளவளாவினான். எவ்வளவோ பெருத்த சமஸ்தானாதிபதிகளையும், தன்னைக் காட்டிலும் அழகிலும் செல்வத்திலும் மேம்பட்ட எத்தனையோ மன்மத புருஷர்களையும் சிறிதும் இலட்சியம் செய்யாத மகா உன்னத மான அந்தத் தெய்வ கன்னிகையின் நட்பையும், அவளது பிரியத்தையும், சுகபோகங்களையும் தான் அதிசீக்கிரத்தில் அடையப் போவதைப்பற்றி கரைகடந்த வெறிகொண்டு நின்ற மைனர், வண்டி உள்ளே போனவுடனே தனது மறைவிடத்தை விட்டு மெல்ல வெளிப்பட்டு கதவண்டை வந்து உட்புறத்தில் உற்று நோக்கிய வண்ணம் அதிக ஆவலோடு நின்று கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/106&oldid=646982" இலிருந்து மீள்விக்கப்பட்டது