பக்கம்:மதன கல்யாணி-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95

மறுபடியும் வருவதாக அவளிடம் ஏற்பாடு செய்து விட்டு, தனது பங்களாவுக்கு வந்தான் என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அன்று பகல் சரியாக இரண்டு மணி சமயத்தில் தேனாம் பேட்டையில் மீனாகூஜியம்மாளது பங்களாவண்டை நமது வீணை வித்துவானான மதனகோபாலன் வந்து வாசலில் இருந்த தோட்டக் காரனைக் கண்டு, “உள்ளே எல்லோரும் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்க, மீனாகூஜியம்மாளும், துரைராஜாவும் கண்மணி அம்மாளுக்கு சில முக்கியமான வைர ஆபரணம் வாங்கும் பொருட்டு டாக்கர் அண்டு சன்ஸ் என்ற கம்பெனிக்கு அப்போதே புறப்பட்டுப் போனதாகவும், கண்மணியம்மாள் மாத்திரம் மெத்தையின் மேல் வீணையுடன் தங்களது வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும் தோட்டக்காரன் மறுமொழி கூறினான். அந்தச் செய்தியைக் கேட்ட மதனகோபாலன் ஒருவகையான தடுமாற்றத்தை அடைந்து தத்தளித்தவனாய் இரண்டொரு நிமிஷ நேரம் அப்படியே நின்றான். அதுகாறும் அவன் பாடங்கற்றுக் கொடுத்த போதெல்லாம் மீனாகூஜியம்மாளும் கூடவே இருப்பது வழக்கம் ஆதலால், அன்று கண்மணியம்மாள் மாத்திரம் தனிமையில் இருக்கும் போது, அன்னிய புருஷனான தான் போய் பாடங்கற்றுக் கொடுப்பது சரியல்ல என்று நினைத்து லஜ்ஜை அடைந்து திரும்பித் தனது வீட்டிற்குப் போய்விடலாம் என்று யோசனை செய்தவனாய் நின்றான். அவள் வீணையோடு தனது வருகையை எதிர்பார்த்திருப்பதாக தோட்டக்காரன் சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு தான் உள்ளே போகலாமா என்ற நினைவு மனதில் எழுந்தது. அன்று சரியாக இரண்டு மணிக்கு வரும்படி, முதல் நாளே கண்மணியம்மாள் மீனாகூஜியம்மாளுக்கு எதிரில் தனக்கு சொல்லி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது ஆகையால், மெத்தை மீது சென்று அந்த அணங்கைக் காண்பதில் பிசகில்லை என்றும், தான் தனியாளாக இருப்பது பற்றி அவள் அப்போது பாடங்கற்றுக் கொள்ள விரும்பாவிடில் தனது பழியைக் கழித்துக் கொண்டு திரும்பிப் போய்விடலாம் என்றும் தீர்மானம் செய்து கொண்டவனாய், பங்களாவின் கட்டிடத்திற்குள் நுழைந் தான். அவன் மகா அற்புதமான அழகு வாய்ந்த யெளவனப் புருஷன் என்பது முன்னரே சொல்லப்பட்டு இருக்கிறது. அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/113&oldid=646996" இலிருந்து மீள்விக்கப்பட்டது