பக்கம்:மதன கல்யாணி-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97

அதில் பல கூடங்களும் மாடங்களும் நிறைந்திருந்தன. அவை களுள் எந்த விடுதியில் கண்மணியம்மாள் வழக்கமாக இருந்து வினை கற்றுக் கொள்ளுவாளோ அந்த இடத்தை நோக்கிச் சென்று உள்ளே நுழைந்து விடாமல் வெளியில் நின்ற வண்ணம், உட்புறத்தில் மெல்ல நோக்கினான்; சற்று தூரத்தில் போடப்பட் டிருந்த ஒரு சோபாவின் மேல் கண்மணியம்மாள் சுவர்ண விக்ரகம் போல உட்கார்ந்திருந்ததைக் கண்டான். ஆனால் அவளது முதுகுப் பக்கமே அவனுக்கெதிரில் இருந்தமையால், அவன் வந்ததை அந்த வடிவழகி உணரவில்லை. ஏகாந்தத்திலிருந்த அந்த உன்னத மங்கையிடம் தான் சொல்லுவது அவளுக்கு ஆயாசமாக இருக்குமோ என்ற அச்சமும் தயக்கமும் திரும்ப எழுந்து அவனை வதைக்கத் தொடங்கின. அந்த மடமயிலாள் அப்புறத்தில் தனது பார்வையை வைத்துக் கொண்டு, தனது மனத்தையும் நினைவையும் ஒரே நிலையில் நிறுத்தி சிந்தனையில் ஆழ்ந்திருந்த தாகத் தோன்றியது. நிற்க அந்தப் பெண்மணி, தனக்கருகில் இருந்த ஒரே சிறிய சவுக்கத்தை அடிக்கடி எடுத்துத் தனது நாசியை சுத்தம் செய்து கொள்வதாகவும் தனது கண்களில் இருந்து ஊற்றெடுத்து வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொள்வதாகவும் தெரிந்தது. அவள் விம்மி விம்மி அழுததால் எழுந்த ஒசையும் மதனகோ பாலனது செவிக்கும் எட்டியது.

என்றைக்கும் காணாத அந்த விபரீதக் கோலத்தில் அவளைக் கண்டவுடனே, மதனகோபாலன் துடித்தான். அவனிடம் வீணை கற்றுக் கொண்ட பெண்பாலார் யாவரிலும், அவளொருத்தியே அழகிலும் குணங்களிலும் நடத்தையிலும் மாசில்லா மாணிக்கம் போன்றவள் என்பது அவன் கொண்டிருந்த அபிப்பிராயம். அவளுக்கு அடுத்தபடியில் வைக்கத்தக்கவள் மாரமங்கலம் சமஸ் தானத்து இளைய பெண்ணான கோமளவல்லி என்பதும் அவனது நினைவு; அப்படிப்பட்ட மகா சிரேஷ்டமான அந்த தெய்வ கன்னிகையிடத்தில், அவன் தனது அந்தரங்கமான அன்பையும் அபிமானத்தையும் வைத்திருந்தவன் ஆதலால், அவளது கரைகடந்த துயரத்தைக் காண, அவனது தேகம் பதறியது. கபடம் என்பதையே அறியாத மகா பரிசுத்த ஸ்வரூபிணியான அந்தப் பெண்மணியின் மனம் சஞ்சலப்பட, அந்த ஈசுவரனும் சகித்திருப்பானோ என்ற ம.க.i-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/115&oldid=647000" இலிருந்து மீள்விக்கப்பட்டது