பக்கம்:மதன கல்யாணி-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99

ஒலிபோல இன்பம் பயந்த அவனது சொல்லைக் கேட்ட கண்மணி, “நீங்கள் வந்தால், பாடம் கற்றுக் கொள்ளும்படி, அத்தையம்மாள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆகையால் பாதகமில்லை. வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம்; தரையில் விரிக்கப்பட்டிருந்த பிரம்புப் பாயினண்டையில் தனது வினையை எடுத்து வைத்தாள். அவளது சொல்லைக் கேட்டு ஒருவாறு திருப்தி அடைந்த மதனகோபாலன், தயங்கித் தயங்கி அடக்கவொடுக்கமாக உள்ளே நுழைந்து வீணைக்கு இரண்டு மூன்று கஜதுரத்துக்கப்பால் உட்கார்ந்து கொள்ள, கண்மணியும் கீழே குனிந்தபடியே வீணையண்டையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் அழுததைக் கண்டமுதல் மதனகோபாலனது மனம் சரியான நிலைமையில் இருக்கவில்லை. அவளது துயரத்தின் காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவனது மனம் துடித்துக் கொண்டிருந்ததே அன்றி, அவனது கவனம் சங்கீதத்தில் செல்லவே இல்லை. கண்மணி அம்மாள் ஐந்து நிமிஷத்தில் தனது வீணைக்குச் சுருதி கூட்டி வைத்தாள். அதன் பிறகு, அவன் எதைப் பாடச் சொல்லுகிறானோ அதை அவள் பாடுவது வழக்கம் ஆதலால், அவன் சொல்லுவான் என்று, கண்மணி எதிர்பார்த்து சிறிது நேரம் மெளனமாக உட்கார்ந்து, வீணையின் கம்பிகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்; தனது நினைவு முழுதையும் வேறு விஷயத்தில் வைத்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த மதனகோபாலன் அவள் சுருதி கூட்டி தனக்காகக் காத்திருக்கிறாள் என்பதை கவனியாமல் இருந்தான். அவ்வாறு கால் நாழிகை நேரம் கழிந்தது. அப்போது கண்மணி மிருதுவான குரலில், “சுருதி கூட்டியாய் விட்டது. என்ன பாடுகிறது?” என்றாள். அதைக் கேட்ட மதனகோபாலன், துங்கி அப்போதே விழித்தவன் போல திடுக்கிட்டு அவளை நோக்கி"சரி சுருதி கூட்டியாய்விட்டதா? அதை நான் கவனிக்கவில்லை. என்னுடைய நினைவு எங்கேயோ போய்விட்டது. கண்மணியம்மா என் மனம் என்னவோ சகிக்க முடியாத சஞ்சலம் அடைகிறது. பட்டிலேயே என் புத்தி செல்லவில்லை. உனக்கு எதில் விருப்பமோ அதைப் பாடு” என்று கூற, அவனது கண்கள் மிகவும் கலங்க, கண்ணிர் சரசரவென்று கன்னங்களில் வழிந்தது. அவன் உடனே கீழே குனிந்து, தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/117&oldid=647004" இலிருந்து மீள்விக்கப்பட்டது