பக்கம்:மதன கல்யாணி-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #Of

மாட்டாமல் அவள் தன்னை முற்றிலும் மறந்தவளாய்க் கோவெனக் கதறி அழுதுவிட்டாள். மதனகோபாலன் அவளது பரிதாபகரமான நிலைமையைக் காணச் சகியாதவனாய் தனது வஸ்திரத்தால், முகத்தை மூடிய வண்ணம் தனது சங்கடத்தை மறைத்துக் கொண்டான்; அப்படி கால் நாழிகை நேரம் கழிந்தது. அதற்குள் தனது மனவெழுச்சியை அடக்கிக் கொண்டு மதனகோபாலன் அவளை நிரம்பவும் மரியாதையாகவும் பணிவாகவும் நோக்கி, “அம்மா! குழந்தாய்! என்ன நடந்தது? ஏன் விசனப்படுகிறாய்? எவராகிலும் உனக்கு ஏதேனும் துன்பம் செய்தார்களா? அல்லது, உடம்பில் அசெளக்கியம் ஏதேனும் உண்டா? அது என்னிடம் தெரிவிக்கக்கூடியதாய் இருந்தால் வெளியிடம்மா? உன்னுடைய விசனத்தை ஒழிக்க, என்னால் ஏதேனும் உதவி ஆகக்கூடியதாய் இருந்தால் அதைச் செய்கிறேன்” என்று நிரம்ப உருக்கமாகவும் அன்போடும் கூற, அதற்குள் தனது துக்கத்தை அடக்கிக் கொண்டு கண்மணியம்மாள் தரையை நோக்கிய வண்ணம், “பெரிய மனிதருக்கு என்ன துயரம் இருக்கப் போகிறது என்று கேட்டீர்களே, எல்லா விஷயத்திலும் மகா புத்தி மானாகிய உங்களுக்குக்கூட இந்த விஷயத்தில் உண்மை தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்க முடியாது. என்னைத் தேற்றுவதற்கு ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா; அதற்காக இப்படிப் பேசி இருக்கலாம். பணக்காரர் என்று சொல்லப்படுவோருக்கே துன்பங்களும் துக்கங்களும் அதிகமின்றி சாதாரண ஜனங்களுக்கு அவ்வளவில்லை என்றே சொல்ல வேண்டும். உலகத்தில் பணமும், நிலமும் ஆடை ஆபரணங்களும் ஏராளமாக இருப்பதுதானா செல்வம்? செல்வம் என்பது சிந்தையின் அமைதியல்லவா? அந்த திருப்திச் செல்வம் உண்மையில் எவர்களிடத்தில் இருக்கிறதோ, அவர்களே உண்மையில் செல்வந்தர்கள். சாதாரண மனிதர் சுலபத்தில் திருப்தி அடைந்து விடுகிறார்கள். பெரிய மனிதருக்கோ, அவரது பொருள்கள் பெருகப் பெருக அவர்களது அதிருப்தியும் பேரவாவும் அதனால் துன்பங்களும் துயரங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. பணத்தை அதிகமாகப் படைத்தவர்கள் என்ன செய்வார்கள்? அதைச் செலவு செய்து அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/119&oldid=647007" இலிருந்து மீள்விக்கப்பட்டது