பக்கம்:மதன கல்யாணி-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மதன கல்யாணி

வாசஸ்தானம் ஏற்படுத்திக் கொள்வார்கள் தங்களுடைய உடம்பைச் செழுமையாக ஊட்டி வளர்த்து அதற்கு மினுக்கேற்றிக் கொள்ளு வார்கள்; உயர்வான ஆடை ஆபரணங்களை வாங்கி அணிந்து அழகு படுத்திக் கொள்ளுவார்கள்; வெளித்தோற்றமான காரியங் களிலேதான், பெரிய மனிதர் பெரிய மனிதராக இருக்கிறார்கள். சாதாரண மனிதர், தங்களுக்கு வெளிப் பகட்டில்லாமல், பிறர் தம்மை அலட்சியம் செய்து விடுவார்களோ என்ற நினைவினால், நற்குணம், நல்லொழுக்கம், அடக்கம், ஒடுக்கம், பணிவு, நீதிநெறி தவறாமை முதலிய இணையற்ற ஆபரணங்களை அணிந்திருக் கிறார்கள். பணக்காரரிடம் ராஜஸ், தாமஸ் குணங்கள் அதிகமாக இருக்கின்றன. சாதாரண மனிதரிடம் சாத்வீக குணம் நிரம்பி இருக்கிறது. செல்வம் எவ்விடத்தில் அதிகமாக இருக்கிறதோ, அங்கேதான் என்ற ஆணவமும் செருக்கும் துர்க்குணங்களும் வந்து குடிகொள்ளுகின்றன. ஏழ்மைத் தனமுள்ள இடத்தில் அடக்கமும், தீயசெயல்களுக்கு செயல்களுக்கு அஞ்சுதலும் இருக்கின்றன. ஆகையால், பெரிய இடத்தில் வந்து பெண்ணாகப் பிறந்து விட்டோமே என்ற பெருத்த துயரமாக என்னை வதைக்கிறது” என்று கூறி நெடுமூச் செறிந்தாள். அதைக் கேட்ட மதனகோபாலன், “குழந்தாய்! நீ இதுவரையில் அதிருப்தியான வார்த்தை ஒன்று கூடச் சொன்னதை நான் கேட்டதில்லை. அப்படிப்பட்ட நீ இவ்வளவு கசப்பான வார்த்தைகளையும் விரக்தியான சங்கதி களையும் எடுத்துச் சொன்னது எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. இன்ன காரணத்தினால் உன் மனம் இப்படி மாறி இருக்கிறதென்பது தெரியவில்லையே! நீ இனிமேல் இல்லற வாழ்க்கையில் புகுந்து அபாரமான வைபவங்களோடு சுவர்க்க போகம் அனுபவித்திருக்க வேண்டிய காலம் சமீபித்திருக்கையில், நீ இப்படி விரக்தி கொண்டிருப்பது, உன்னுடைய இன்பகரமான வாழ்க்கைக்கு ஒரு பெருத்த இடையூறு ஆகிவிடுமே” என்றான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாளது வதனம் முன்னிலும் அதிகமாக வாட்டமடைந்தது; கண்கள் கலங்கின; அவள் திரும்பவும் விரக்தியாகப் பேசத் தொடங்கி, “என்ன இல்லற வாழ்க்கை! என்ன வைபவங்கள்! என்னுடைய அதிர்ஷ்டம் யாருக்கு வரும்! பெண்ணாய்ப் பிறந்தாலும் என்னைப் போலத் தான் பிறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/120&oldid=647011" இலிருந்து மீள்விக்கப்பட்டது