பக்கம்:மதன கல்யாணி-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மதன கல்யாணி

சேர்ந்த மனிதரது குணாதிசயங்களைப் பற்றி நன்றாக அறியாதவன் ஆகையால், கண்மணியம்மாள் கூறிய விஷயங்கள் அவனுக்கு நிரம்பவும் ஆச்சரியமாக இருந்தன. அவர்கள் அப்படிப்பட்ட துஷ்டர்களா என்று நினைத்து அவன் பெரிதும் திகைப்படைந் தான். கண்மணியம்மாள் சரியான காரணமின்றி, வீணாகத் துயரப் படுகிறாள் என்று முதலில் நினைத்த மதனகோபாலன், அந்தப் பெண்மணி ஆறாத்துயரத்தில் ஆழ்ந்ததற்குத் தக்க முகாந்திரம் இருப்பதாக அப்போது நினைத்து அவளது விஷயத்தில் பெரிதும் இரக்கம் கொண்டான். மகா ரூபலாவண்ணியமும் அருமையான குணங்களும் வாய்ந்த கபடமற்ற அந்தப் பெண்மணியின் பிற்கால வாழ்வு மிகவும் துன்பகரமானதாக இருக்கும் என்பதை உணரவே அவனது தேகம் பதறியது. ஆவேசம் பொங்கி எழுந்தது. அவள் தனது விரக்தியில் என்றைக்காகிலும் கிணற்றில் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டவனாய், “குழந்தாய்! நீ மகா விவேகி என்பதை நான் நெடுநாளாக அறிவேன். நீ எதைச் செய்தாலும் கொஞ்சமும் ஆத்திரப்படாமல், பொறுமையாக நிதானித்துச் செய்கிற உத்தம குணம் உடையவள் என்பதையும் நான் கண்டு கொண்டேன். அப்படி இருக்க, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்ற வார்த்தை உன்னுடைய வாயிலிருந்து வரத்தக்கதல்ல. கேவலம் மூட ஸ்திரீகளே அப்படிச் சொல்ல நான் கேள்வியுற்றிருக்கிறேன். இப்படிப்பட்ட எண்ணத்தைக் கொள்ள, மகா கண்ணியம் பொருந்திய உன் மனம் எப்படி இடங்கொடுத்ததென்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. உனக்கு அந்த இடத்தில் வாழ்க்கைப்பட மனம் இல்லாவிட்டால், உன்னுடைய எண்ணத்தை, தக்க முகாந்திரங்க ளோடு அத்தையம்மாளிடம் துணிவாக நீ எடுத்துச் சொன்னால் அவர்கள் அதைக் கேட்க மாட்டேன் என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல. நான் பார்த்த வரையில், அவர்கள் உன்னுடைய கூேடிமத்திலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளவர்கள் என்றே நினைக்கிறேன். கிளியை வளர்த்துப் பூனைக்கு இரையாக்குவது போல, தமது சொந்தக் குழந்தையாக மதித்து அரும்பாடுபட்டு மிகவும் செல்வமாக வளர்க்கும் உன்னை விசனக் கடலில் ஆழ்த்த அவர்கள் ஒருநாளும் சம்மதப்பட மாட்டார்கள். விஷயங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/122&oldid=647014" இலிருந்து மீள்விக்கப்பட்டது