பக்கம்:மதன கல்யாணி-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105

எடுத்துச் சொல்ல நீ ஒருகால் லஜ்ஜைப் படலாம். இந்த விஷயம் ஆயுள் காலம் எல்லாம் பாதிக்கக்கூடிய பெருத்த விஷயம். ஆகையால், நீ துணிந்து இந்த விவரங்களை எடுத்து அத்தை யம்மாளிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். அப்படிச் செய் அம்மா’ என்று அன்பொழுகவும் நயமாகவும் அவளது மனதில் பதியும்படியாகவும் கூறினான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாள் அசட்டு நகை நகைத்த வளாய், “நான் அத்தையம்மாளிடம் சொல்ல வேண்டியது ஒன்றும் பாக்கி இல்லை; அதெல்லாம் செவிடன் காதில் சங்கை ஊதின மாதிரி ஆகிவிட்டது. அவர்கள் எல்லாம் பெரிய மனுஷத்தனத்தி லேயே இருந்திருந்து, அதன் சுகங்களைப் பார்த்தவர்கள். ஆகையால் ஒருவருக்கொருவர் பிரியமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், ஒற்றுமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவைகள் பொருட்டல்ல, பணமே பிரதானம். எங்களுக்கு அதிகமான ஆஸ்தி இல்லையாம். ஆகையால் என்னை மார மங்கலம் ஜெமீந்தாரிணி ஆக்கப் போகிறார்களாம். மற்றவர்கள் எப்படியாவது போகட்டுமாம். என்னுடைய புருஷன் எப்படியும் நாளடைவில் சரிப்பட்டு, என் சொற்படி அடங்கி ஒழுங்கான வழிக்கு வந்துவிடுவாராம். பெண்கள் இருவரும் எவரையாவது கட்டிக் கொண்டு அதிசீக்கிரத்தில் வேறிடங்களுக்குப் போய்விடக் கூடியவர்களாம். கல்யாணியம்மாள் பெண்களுடைய வீட்டுக்கு மாறி மாறிப் போய்விடுவார்களாம்; அல்லது அவர்கள் தனியாக அரண்மனையில் இருந்தாலும், அவ்வளவு துஷ்டத் தனத்தைக் காண்பிக்க மாட்டார்களாம். இம்மாதிரி அத்தையம்மாள் சொல்லு கிறார்கள்” என்றாள். அதைக் கேட்ட மதனகோபாலன் சிறிது ஆழ்ந்து யோசனை செய்தபின், “சரிதான். அவர்கள் சொல்லுவதும் நியாயமாகத்தான் இருக்கிறது. பெண்கள் இருவரும் சீக்கிரத்தில் வெளியேறக் கூடியவர்கள் தானே அவர்கள் போய்விட்டால், அப்புறம் என்ன துன்பம் இருக்கப் போகிறது?” என்று நயமாகக் கூறினான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாள், “எனக்கு அந்தப் பெண் களைப் பற்றி அதிகமாகக் கவலை இல்லை. அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/123&oldid=647016" இலிருந்து மீள்விக்கப்பட்டது