பக்கம்:மதன கல்யாணி-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மதன கல்யாணி

தாயின் வீட்டுக்கு அவர்கள் வரவும், சுகப்படவும் கூடாதென்று யார்தான் சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதும் நியாயமல்ல. கல்யாணியம்மாள் கிழவியல்ல; யெளவனப் பருவமுடையவர் கள். அவர்கள் ஏக சக்கராதிபதியாக இருக்கிறார்கள். அவர் களுடைய அதிகாரமும் அட்டகாசமும் நீடித்து நிற்கக்கூடியவை. தவிர, பெண்கள் பெருத்த செல்வந்தர் வீட்டுப் பெண்கள் ஆகையால் தங்களுடைய புருஷர் வீட்டில் மூன்று நாள் இருந்தால், தாய் வீட்டில் முன்னுறு நாள்கள் இருக்கக் கூடியவர் கள். அப்படி இருந்தாலும், அவர்கள் மூவரைப் பற்றியும் எனக்கு அவ்வளவாகக் கவலையில்லை. எனக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகும் சீமானுடைய குணமும், காரியங்களும், அவரது மனப்போக்கும், வார்த்தைகளும் கொஞ்சமும் சகிக்கத் தகாதனவாக இருக்கின்றன. அவர் இந்தப் பங்களாவில் வந்து இரண்டு மூன்று வருஷ காலமாகப் பழகி வருகிறார். என்னுடைய அண்ணனோடு அவர் செய்யும் யோசனைகளும், பேசும் வார்த்தைகளும், கன்னகடுரமாக இருக்கின்றன. எங்களுக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாகப் பேசுவதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள். இரவு பகலாக அவர்கள் செய்யும் சதியாலோசனை எல்லாம் எங்களுடைய காதில் படுகின்றன. இந்த உலகத்தில், அவர்கள் இருவரும் பார்க்காத தாசிகள் இல்லை. இப்போது மோகனாங்கி என்று ஒரு நாடகக்காரி வந்திருக்கிறாளாம். அவள் எங்கேயோ ஆலந்துருக்குப் பக்கத்தில் இருக்கிறாளாம். அவள் எவரையும் சேர்ப்பதில்லையாம். அவளோடு எப்படியாவது சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு மைனர் துரை இன்று ஆலந்துர்ப் பக்கம் போயிருக்கிறார்; இதே நேரத்தில் அவர் அந்த மோகனாங்கியிடத்தில் சந்தோஷமாக சம்பாவித்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம்” என்றாள். அப்போது அவளது மனதில் பொங்கி எழுந்த உணர்ச்சிகளை அவளது அழகிய வதனம் நன்றாகத் தெரிவித்தது. அவளது சொல்லைக் கேட்ட மதன கோபாலனது முகம் சடக்கென்று மாறி வியப்பையும் திகைப்பை யும் காட்டியது. அவன் “என்ன ஆச்சரியம்! அவர் நிரம்பவும் நல்ல குணம் உடையவர் என்றல்லவா நான் இதுவரையில் நினைத் திருந்தேன்! அடடா அவர் இப்படிப்பட்ட மனிதரா? இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/124&oldid=647018" இலிருந்து மீள்விக்கப்பட்டது